Ad Code

வாழ்வு தரும் விசுவாசம் • Life Giving Faith • SMC Lenten Meditation 2024

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 5 -ம் ஞாயிறு (லெந்து 2 வது ஞாயிறு )
தேதி: 25/02/2024
வண்ணம்: செங்கரு நீலம்  
திருமறை பாடங்கள்:   
2 இராஜாக்கள் 4:1-7
யோவான் 5: 1-9
அப்போஸ்தலர் 5:12-16
சங்கீதம்: 72 

2. திருவசனம் & தலைப்பு 
வாழ்வு தரும் விசுவாசம்
இயேசு அவனை நோக்கி; எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். யோவான் 5:8,9 (மு) (பவர் திருப்புதல்)
இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.யோவான் 5:8,9 (மு) (திருவிவிலியம்)  
  Life Saving Faith 
Then Jesus said to him “Get up! Pick Up your mat and walk.” At once the man was cured; he picked up his mat and walked. John 5: 8,9 (NIV)
Jesus said to him, “Stand up, take your mat and walk.” At once the man was made well, and he took up his mat and began to walk. John 5: 8,9 ( NRSV)

 3. ஆசிரியர் & அவையோர்
இந்த நற்செய்தி நூலானது இயேசுவின் அன்பான சீடனும், அப்போஸ்தலருமாகிய தூய யோவான் எழுதிய நூலாகும். கிபி 2ம் நூற்றாண்டில் (AD180) வாழ்ந்த ஆதி திருத்தந்தையர் இரேனியஸ் அவர்கள் இந்த நான்காவது நற்செய்தி நூலானது இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான அன்பான சீடன் யோவானால் எழுதப்பட்டிருக்கிறது என்று சான்று பகிர்கிறார் . அதேபோல் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருச்சபையின் சிறந்த வரலாற்று ஆசிரியரான Eusebius அவர்களும் இந்த நற்செய்தி நூலானது யோவான் தான் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். இது முதலாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சமூகத்திற்கு எழுதுகிறார். இந்த சமூகம் Johannaine Community என்று அழைக்கப்படுகிறது. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
எருசலேம் அழிவுக்கு (கிபி 70) பிறகு கிபி 80-க்கும் கிபி 100- க்கும் இடைப்பட்ட காலத்தில் எபேசுவில் வைத்து எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இது முதலாம் நூற்றாண்டின் பின் பகுதியில் கிறிஸ்துவையும், அப்போஸ்தலரையும் நேரில் கண்டிராத கிறிஸ்தவ சமூகம் வாழ்வு தரும் கிறிஸ்துவின் மீதும் அவரின் போதனையின் மீதும் ஆழமான நம்பிக்கை வைக்கவும். அக்காலத்தில் கிறிஸ்துவின் தன்மை (கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படவில்லை) மீது காணப்பட்ட கள்ள உபதேசத்திலிருந்தும், கள்ள போதகர்களிடமிருந்தும் விடுவிக்கவும், திருச்சபை மக்களுக்கு அறிவுரை வழங்குவதற்காகக் எழுதப்படுகிறது. மற்றும் கிறிஸ்துவின் உண்மைத்தன்மை பற்றியும், கிறிஸ்து உண்மையாகவே மனிதனை மீட்க மானிடராக அவதரித்து என்பதை எடுத்துரைப்பதற்காக எழுதப்படுகிறது. (This gospel was written to convey the truth about Jesus Christ and to present him as the true incarnation of God on earth.)  

5. திருவசன விளக்கவுரை  
யோவான் 5 ம் அதிகாரம் 1 ம் வசனம் முதல் 9ம் வசனம் வரை இயேசு கிறிஸ்து முப்பத்தெட்டு வருஷம் படுத்த படுக்கையோடு வியாதியாக தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனை குணப்படுத்தும் நிகழ்வு காணப்படுகிறது (Jesus Heals a Man at a Pool). இயேசு கிறிஸ்து யூதருக்கான பண்டிகையின் போது எருசலேமுக்கு செல்கிறார். அங்கு ஆட்டு வாசலின் அருகே எபிரேய பாஷையில் பெதஸ்தா என்னும் பேர்கொண்ட ஒரு குளம் இருக்கிறது. பெதஸ்தா என்பதற்கு இரக்கத்தின் வீடு, அல்லது கிருபையின் வீடு (The House of Mercy or House of Grace) என்று பெயர். இந்த குளமானது பழைய எருசலேமில் இருந்து வடகிழக்கு பகுதியில் ஓரமாக இருக்கிறது. இந்த குளத்தின் அருகே குருடர், சப்பானியர் சூம்பின உறுப்புடையோர் என அநேகர் தேவதூதன் எப்போது அந்த தண்ணீரை கலக்குவார் நாம் எப்போது தண்ணிரில் இறங்கி குணமடைய வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அப்பொழுதுதான் இயேசு 38 வருடம் வாழ்க்கையின் பாதி நாட்களை வியாதியில் கழித்து இரக்கத்தின் வீடாகிய அந்த குளத்தின் அருகே இரக்கமற்று காத்திருந்த நபரிடம் நீ குணமடைய விரும்புகிறாயா என்று கேட்கிறார். இந்த கேள்வியின் நோக்கம் அந்த மனிதனுடைய நம்பிக்கையை தட்டி எழுப்புவது ஆகும். 

ஏனென்றால் 38 வருடம் வியாதி நீங்காமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சி செய்து ஒன்றும் நடைபெறவில்லை. அவன் நான் தனியாக இருக்கிறேன், எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்கிற உணர்வு அவனுக்குள் இருந்தது. யாரும் கண்ணோக்கி பார்க்காத அந்த மனிதனை இயேசு கண்ணோக்கி பார்த்து, “எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். அந்த மனிதன் அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை கொண்டு உடனடியாக தன் படுக்கையை விட்டு எழுந்து நடந்து சென்றான் வாழ்வை பெற்றுக்கொண்டான். அந்த மனிதனுடைய நம்பிக்கை இயேசு சொன்ன வார்த்தையின் மீதும் அதற்கு கீழ்ப்படிவதிலும் இருந்தது அதனால் வாழ்வை பெற்றுக்கொண்டான். நம்முடைய நம்பிக்கையும் கடவுளின் வார்த்தையின் மீதும் அதற்கு கீழ்ப்படிவதிலும் இருக்கும் போது கடவுள் நம்முடைய வாழ்விலும் முடியாததை முடிய செய்வார்.

6. இறையியல் மற்றும் வாழ்வியல் 
கடவுள் படைத்த இந்த உலகத்தில் கடவுளால் முடியாது என்று ஒன்றும் கிடையாது. நம் விசுவாசத்தால் தேவனுடைய மகிமையை காண முடியும். விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று கடவுளின் வார்த்தைகள் பல்வேறு சூழ்நிலைகளில் நமக்கு ஊக்கமளிக்கிறது. யோவான் 5: 1-9 வேத பகுதிகளில் கிறிஸ்துவின் தன்மையை கரிசனையுள்ள கிறிஸ்து என்றும் , நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து கொள்ளும் கிறிஸ்து என்றும், உதவி செய்யும் கிறிஸ்து என்றும் நாம் வரையறுக்கலாம். எனவே கிறிஸ்துவே நம் வாழ்வில் வெளிச்சமாக இருக்கிறார். நாம் நம்முடைய வாழ்வில் நிலையான வாழ்வை சரீரத்தில் மட்டும் அல்ல ஆன்மீக வாழ்விலும் பெற்றுக்கொள்ள அவரை உண்மையை பற்றிக்கொள்ள வேண்டும், அவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதன்படி நடக்க வேண்டும் அதுவே நமக்கு நித்திய வாழ்வை தரும். ஆமென்  

7. அருளுரை குறிப்புகள்
    வாழ்வு தரும் விசுவாசம்
A. உண்மையுள்ள விசுவாசம் வாழ்வு தரும்
B. கீழ்ப்படிதலுள்ள விசுவாசம் வாழ்வு தரும்  
C. செயல்படும் விசுவாசம் வாழ்வு தரும்  

எழுதியவர்
G. ஜெபஸ்டின் 
சபை ஊழியர், பெருமாள்புரம் சேகரம் 

Post a Comment

0 Comments