தியானம்: 33 / 40 - சிநேகிதர்
எழுதியவர்: செல்வன். சா. அகஸ்டின் தாமஸ்
தலைப்பு: சிநேகிதர் ❤️ Friend
வசன இருப்பிடம் : மத்தேயு 11:19, லூக்கா 7:34, மத்தேயு 9:13
தலைப்பின் அர்த்தம்:
சினேகிதர் என்றால் நண்பர் (friend) என்று அர்த்தம்.
விளக்கவுரை :
மத்தேயு 11:19, லூக்கா 7:34 இல் அங்குள்ள ஜன கூட்டம் இயேசுவை மதுபான பிரியன் என்றும் போஜன பிரியன் என்றும் முறுமுறுத்தார்கள். இவர் எப்படி சிநேகிதனாக இருக்க முடியும் என்று வினவினார்கள்.
இயேசு அங்குள்ள வீடுகளுக்கு சென்று (போஜனம்) உணவு அருந்துவது வழக்கம் இதைதான் அங்குள்ள மக்கள் போஜன பிரியன் என்று தவறாக சித்தரித்தனர். நான்கு சுவிசேஷ புத்தகத்திலும் , ஏசுவனவார், ஆயக்காரர்களின் வீடுகளில் உணவு உண்ணுவதும், உவமைகளை கூறுவதையும் நாம் கவனிக்க முடியும். ஏசுவானவர் பாவிகள் இடமே அதிகம் தரித்திருப்பதையும் நாம் காணலாம். “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்றார். இவ்வழைப்புக்கு, சாட்சியாகவே அநேக அற்புதங்களை பாவிகளிடமே நாம் காண முடியும்.
இயேசுவின் கவனம் பாவிகளை நோக்கி இருந்தது. அவ்வண்ணமாகவே பாவிகளாய் இருக்கும் நாமும் ஆண்டவரால் கிருபை பெற்றவர்களாகவும், ஆசி பெற்றவர்களாவும் இருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக,
தாவீது ராஜா தவறான உறவிலும் , யோனா கர்த்தரை விட்டு தூரம் போனவனாகவும் , பவுல் கொலைகாரனுமாகவும் , யோபு பொய் பேசுகிறவனாகவும் மற்றும் இயேசுவின் காலத்தில் பாவம் உள்ள ஸ்திரி , குஷ்ட ரோகி, இப்படி அநேகரிடம் பாவ மற்றும் சரீர பாடுகள் இருந்தாலும் தேவன் இவர்கள் மேல் கிருபையாக இருந்து போல நம் மீதும் கிருபையாகவே இருக்கிறார்.
முடிவுரை :
நம்மை சிநேகிக்கிறவர் நமக்காக நம்முடைய பாவ பாடுகளை எல்லாம் அவர் ஏற்று கொண்டு தம் ஜீவனே கொடுத்தார் , நம்மை சிநேகித்தவருக்காகவும் , நாம் சிநேகிக்கிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நாம் என்ன ஒப்புக்கொடுத்திருக்கோம் ????????
0 Comments