Ad Code

நல்ல மேய்ப்பன் • Good Shepherd • SMC • Jesus Christ

SMC Lenten Meditation 2024
தியானம்: 32 / 40 - நல்ல மேய்ப்பன் Good Shepherd 
எழுதியவர்: செல்வன். ம. ஜெய பிரகாஷ்
தலைப்பு: நல்ல மேய்ப்பன்

வசன இருப்பிடம்:
      யோவான் 10:11 & 14

தலைப்பின் அர்த்தம்: (பொருள் & வரையறை)
நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார். சிறந்த, நல்ல, அழகிய, நம்பிக்கையான என்ற பொருளை இந்த “நல்ல” என்ற சொல் குறிப்பிடுகிறது. மேய்ப்பன் என்றால் போதகர், வழி நடத்துபவர் என அர்த்தம்.
நல்ல மேய்ப்பன்=நல்ல போதகர்॥ நம்பிக்கைக்குரிய போதகர்.

விளக்கவுரை:
"நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" (யோவான் 10:11)
என்ற வார்த்தையின் விளக்கமானது,
ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பனானவன் எவ்வாறு அதைப் பாதுகாத்து வழி நடத்துகிறானோ,அதே போல் கடவுள் மேய்ப்பனாகவும் மக்களாகிய (சபையாகிய) நம்மை மந்தையாகவும் பிதா பாவிக்கிறார். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை ஒரு நல்ல மேய்ப்பனாக வெளிக்காட்டியுள்ளார். “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான். “நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன. பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன்.பழைய ஏற்பாட்டில் தேவனை மக்களின் மேய்ப்பன் என்று அழைத்தார்கள். கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் (சங்.23:1). இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டு மந்தையைப் போல் நடத்துகிறவரே, செவிகொடும்; (சங்.80:1).

 1.நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார்.
2.நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறான்.
3. நல்ல மேய்ப்பன் தமது ஆடுகளைப் பாதுகாக்கிறார்.

கற்றுக்கொண்ட பாடம்:
மேய்ப்பன் இல்லாத ஆடு வழிமாறும். அதேபோல் தேவன் இல்லாத வழி வீணாய் போகும். ஆகவே நல்ல மேய்ப்பன் பின்செல்லும் நல்ல ஆடுகளாக வாழ்வோம். மேலும் நல்மேய்ப்பனின் வழிநடத்துதலில் மந்தைகளாம் நாம் இருப்போம். மேய்ப்பன் தாமே நம்மை நடத்துவாராக. ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்!

Post a Comment

0 Comments