1) ஞாயிறு குறிப்புகள்:-
ஞாயிறு: (குருத்தோலை ஞாயிறு ) கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 1ம் ஞாயிறு
தேதி: 24/03/2024
வண்ணம்: ஊதா
திருமறைப்பாடம்.
பழைய ஏற்பாடு : ஏசாயா 56 : 1−8
புதிய ஏற்பாடு: 1கொரிந்தியர் 3 :16 −23
நற்செய்தி பகுதி : மத்தேயு 21 : 1−17
சங்கீதம் 118
2) திருவசனம் & தலைப்பு:-
ஓசன்னா − தேவாலயத்தின் ராஜா
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். (பவர் திருப்புதல் ) சங்கீதம் 118:26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். திருப்பாடல்கள் 118 :26(திருவிவிலியம் )
3) ஆசியர் & அவையோர்":
இந்த சங்கீதம் 118 ஐ எழுதியது யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆதலால் இது ஆவியானவரின் சங்கீதமாகும். இது இஸ்ரவேல் மக்கள் கடவுளுக்கு நன்றி கூறி பாடின சங்கீதமாகும்.
4) எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை:
இந்த சங்கீதத்தை யார் எழுதியது என்று தெரியாததால் காலத்தை கணிக்கிட இயலவில்லை. ஆனால் இந்த சங்கீதம் இரண்டாம் தேவாலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்டபோது ,கடவுளுக்கு நன்றி கூறிய பாடின பாட்டாகும். எனவே எஸ்றா காலத்தில் எழுதப்பட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்கீதம் எபிரேய மொழியில் “தெஹில்லீம்” (Tehillim) என்றுஅழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்”என்பதாகும். கிரேக்க மொழிப்பெயர்ப்பான செப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்” (Psalmoi)என்று அழைப்பர். இதன் பொருள் “இசைக்கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும். இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப்சால் மோரம்” (Liber Psalmorum) என்பதாகும். இதன்பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.
5) திருவசன விளக்கவுரை :
இந்த திருவசனத்தை ஆசாரியர்கள் கூறுகிறார்கள். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.என்பது பிதாவினுடைய குமாரனை குறிப்பிடுகிறார். உலகுக்கு மனுஷக்குமாரனாய் வருகிற மேசியா , பிதாவின் ஒரேபேறான குமாரன், உலக மக்களின் பாவத்தை போக்க வந்த தெய்வ ஆட்டுக்குட்டியாய் , தேவாலயத்தின் ராஜாவாய் வருகிறார் . அவரை போற்றி, மகிமைப்படுத்தி அவரை வேண்டிக்கொள்ளுகிறோம் என்று கூறினார்கள். தேவாலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கவே நியமிக்கப்பட்டுயிருக்கிறோம்.எனவே தேவாலயத்திலிருந்து கர்த்தரின் ஊழியக்காரர்களாகிய நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்றும் கூறினார்கள். தேவாலயத்தின் ராஜா வருகிறார் .
6. இறையியல் & வாழ்வியல்:
இன்றை உலகில் நம்மிடம் ஒரு உலகத்தலைவர் வருகிறார் என்றால் மகிழ்ச்சி, தகுந்த ஆயத்தம் , அலங்கரிப்புடன் அவரை எதிர்பார்போம். ஆனால் உங்கள் பாவங்களுக்காக , சாபங்களுக்காக மரித்து உயிரத்தெழுந்த தேவாலயத்தின் ராஜாவாகிய கிறிஸ்து வருவதை நாம் மகிழ்ச்சியுடன் தகுந்த ஆயத்தத்துடன் ,பரிசுத்தமாய் எதிர்நோக்க இருக்கிறோமா? என்று நாம் சிந்தித்து அறிவோம்.தேவாலயத்தின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தபடுவோம், ஆயத்தப்படுத்துவோம்.
7. அருளுரை குறிப்புகள் :
1.தேவாலயத்தில் மகிழப்பண்ணுகிற தேவாலயத்தின் ராஜா.
2.தேவாலயமே பரிசுத்தமாக விரும்புகிற தேவாலயத்தின் ராஜா.
3.தேவாலயத்தை சுத்திகரிக்கிற தேவாலயத்தின் ராஜா.
எழுதியவர்
பே. மான்சிங் கிளிண்டன்
குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி , சென்னை.
0 Comments