Ad Code

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு • ஏசாயா 1:18 • CSI Diocese of Tirunelveli


1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 11-ம் ஞாயிறு (திரித்துவ 10)
தேதி: 04/08/2024
வண்ணம்: பச்சை 
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:32

 2. திருவசனம் & தலைப்பு
 மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு
ஏசாயா 1:18
     (பவர் திருப்புதல்)  வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 
        (திருவிவிலியம்) "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்" என்கிறார் ஆண்டவர்; "உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். 

 3. ஆசிரியர் & அவையோர்
   பழைய ஏற்பாட்டின் பவுல் என்று அழைக்க கூடிய சிறப்பை பெற்றவர் ஏசாயா ஆவார். ஏசாயாவின் தகப்பன் யூத அரசனான யோவாசின் இளைய மகன் ஆமோத். ஏசாயா ஒரு சிறப்பான அரச குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் சிறந்த மொழி நடையும், இலக்கிய நடையும் பெற்றவர். எருசலேமில் தன்னுடைய தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றினார். இவரது தீர்க்கதரிசனம் அரசனாகிய மனாசேக்கு எரிச்சலை ஏற்படுத்தினதால், மனாசே இவரை இரு தடிகளுக்கு நடுவே கட்டி வைத்து வாளினால் அறுத்து கொலை செய்ததாக யூத பாரம்பரியம் கூறுகிறது.

4. எழுதப்பட்ட காலம்
         ஏசாயாவின் தீர்க்கதரிசன ஊழியம் சுமார் கி. மு. 740 முதல் 681 வரை (1:1). 1-39 அதிகாரங்கள் கி. மு.700 மற்றும் 40-46 வரையிலான அதிகாரங்கள் கி. மு. 681-லும் எழுதப்பட்டதாக கருதலாம்.

5. வசன விளக்கவுரை 
        V. 18= மக்களுடன் உள்ள உறவை மீட்டெடுப்பதற்காக எது சரி என்று உறுதி செய்து கொள்வதற்காக வாதாடுவதற்கு மக்களை அழைக்கிறார். கடவுள் தம்முடைய ஜனங்களின் பாவத்தை வைத்து குற்றப்படுத்துவதற்காக அவர்களை வாதாட அழைக்கவில்லை மாறாக தம்முடைய ஜனங்கள் ( யூதா) விரும்பினால் அவர்கள் மனம் திரும்பி(Conditional ) பாவம் மன்னிக்கப்படுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுப்பதற்க்கு அழைக்கிறார்.

பாவத்தை குறிப்பதற்காக என்றும் அழியாத நிலையாக இருக்கக்கூடிய சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பை பயன்படுத்துகிறார் மற்றும் இது அவர்கள் செய்த குற்றத்தையும் குறிக்கிறது (v.1:15). உறைந்த மழை மற்றும் பஞ்சு ஆண்டவருடைய பாவ மன்னிப்பை குறிக்கிறது ( சங். 51:7).

6. இறையியல் & வாழ்வியல் 
 ஆண்டவர் யூதா மக்கள் மனம் திரும்புவதற்கான வாய்ப்பை கொடுக்கிறார், அவர்கள் மீண்டும் ஆண்டவர் இடத்தில் திரும்பி வருவதற்கான வழியையும் திறந்து வைத்திருக்கிறார் ஆனால் முடிவு எடுத்து ஆண்டவரிடத்தில் வர வேண்டியதை மக்கள் கையில் கொடுத்திருக்கிறார். நாம் விரும்பி மனம் வருந்தி ஆண்டவரிடத்தில் வரும் போது அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு அகற்றி, பரிசுத்தப்படுத்தி நம்மை மறுரூபமாக்குகிறார்.

7. அருளுரை குறிப்புகள்
1. மனந்திரும்புவதே மறுரூப வாழ்வு
2. மன்னிப்பு பெறுவதே மறுரூப வாழ்வு
3. மகிமையாக வாழ்வதே மறுரூப வாழ்வு

Written by
Mr. T. Rebin Austin
Catechist,
Kallidaikurichi Pastorate 

Post a Comment

0 Comments