தேவா இந்த நேரம் நின்னாசீர்வாதம் தா - பர
1. அன்று கானாவூர் கலியாணம் சென்று சிறப்பித்தார் ஆ ஆ
நன்று மிகவே இன்றிங்கே கூடி மன்றல் சிறந்திடவே - கிறிஸ்து தேவா
2. ஆதிமூலனே நீதிகுணாளனே ஜாதிகள் நேசனே ஆ ஆ
தீதில்லாமலே மாது மணாளனும் சேதமொன்றின்றி வாழ - கிறிஸ்து
3. இன்று இம்மணப்பந்தலில் நாங்கள் இனஜனப்பந்துக்காளாய்
ஆ ஆ இங்கிதமாகவே இஷ்டரும் கூடி மங்களம் கொண்டாட - கிறிஸ்து தேவா
4.ஈந்திட உந்தன் ஆவி நிறைவாய் ஆடவர் மங்கையர்க்கு ஆ ஆ
பகர்ந்திடும் இகபர நன்மை பாக்கியம் சகல சம்பத்துடன் - கிறிஸ்து தேவா
5. பெற்றோர் வாழ்க உற்றோர் வாழ்க மற்றோர்களும் வாழ்க ஆ ஆ
எத்திசையுள்ள வெற்றிகிறிஸ்தோர் மிகவே தழைத்தோங்க-கிறிஸ்து தேவா
0 Comments