தவக்கால தியானம்: 01
தலைப்பு: ஆபிரகாம்: பரிந்துரை ஜெபம்
வேத பகுதி:ஆதியாகமம் 18: 16-23; 20:7
வேதாகம நபர் பற்றி:
அப்பா பெயர்: தேராகு
அம்மா பெயர்: கொடுக்கவில்லை
உடன் பிறந்தவர்கள்: நாகோர் மற்றும் ஆரான்
விளக்கவுரை
பிறருக்காக நாம் ஜெபிப்பது அவர்களுக்காக பரிந்துரை இருதயத்தோடு கடவுளை நாடுவதாகும். நாம் பிறருக்காக மன்றாட முன் ஆபிரகாம் போல சில குணாதிசயங்கள் மிகவும் அவசியம். அவைகள்:
ஆதியாகமம் 18:22 படி, ஆபிரகாம் தன்னை விட்டு பிரிந்து சென்ற, லோத் என்ற தன் உறவினனுக்காக கடவுள் முன் நின்றார். அவரிடம் இருந்த, பொறுமை மற்றும் ஆண்டவரோடு இருந்த நெருக்கம் வேண்டும். ஆங்கில வேதாகமம் குறிப்பின் படி,”walked along with them“ (18:16,22). என்ன நடந்தாலும் ஆண்டவரோடு நடக்க வேண்டும்! பாவத்தோடு இல்லை; பிரச்சனை யோடும் இல்லை.
ஆபிரகமுக்கு குமாரன் இல்லை. ஆனால் அவர் அபிமேலக்குகாக விண்ணப்பம் செய்தார். அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார். (20:18, 21:1).
நாம் கற்று கொள்ள வேண்டியது என்ன?
1. நமக்கு எந்த ஆசீர்வாதம் இல்லையோ அதற்காக காத்திருப்போர்காக ஜெபிக்க வேண்டும்.
2. முக்கியமாக நம்முடைய சொந்த உறவுகளுக்காக ஜெபிப்பது மிகவும் அவசியம்.
3. பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிறர் நன்மைக்காக பரிதபியுங்கள்!!
எழுதியவர்
திரு. T. டைட்டஸ்
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments