Ad Code

எலிசா: கண்கள் திறக்க ஜெபம் • Elisha Prayer

தவக்கால தியானம்: 11
தலைப்பு: எலிசா: கண்கள் திறக்க ஜெபம் 
வேத பகுதி: 2 இராஜாக்கள் 6 

வேதாகம நபர் குறிப்பு: 
எலிசா, இவர் சாப்பாத்தின் மகன் மற்றும் எலியா தீர்க்கதரிசியின் சீடரும் உதவியாளரும் ஆவார். 
இவர் யூத தீர்க்கதரிசியும் ஆவார் (1 இராஜா 19:16-19). 
சுமார் 60 ஆண்டுக் காலம் இஸ்ரவேல் தேசத்தில் தீர்க்கதரிசியாக பதவி வகித்தார். 
எலியாவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அருள் பெற்றவர்.
எலிசாவின் பெயர் 'கடவுள் என் மீட்பு' என்றும் 'கடவுளின் வாக்குறுதி' என்றும் பொருள்படும். 
இப்பெயர் 'எலிஷேவா' என்னும் எபிரேய சொல்லிலிருந்து வந்ததாகும்.

விளக்கவுரை:
     இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை பார்த்து, விவாதிக்க தொடங்கினார்கள். நாங்கள் இருக்கும் இந்த தேசம் எங்களுக்கு நெருக்கமாக உள்ளது என்பதால் யோர்தானுக்கு சென்று அங்கே குடியிருக்க போவோம், நீரும் வாரும் என்றார்கள். அப்பொழுது எலிசாவும் உடன் போனார். அக்காலத்தில் அப்பொழுது சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண பாளையமிறங்குதல் குறித்து திட்டம் பண்ணினான்.
     அப்பொழுது எலிசா இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி சில இடங்களில் பாளையமிறங்க வேண்டாம் என்று எச்சரித்தார். இதைக் கண்ட சீரியா ராஜாவின் இருதயம் குழம்பியது. அவன் தன் ஊழியக்காரரை அழைத்து நம்மிடம் உளவு பார்க்கிறவன் யார்? என வினவ அவன் எலிசா பெயரை கூறினான். உடனே எலிசாவை பிடிக்க சீரிய ராஜா ஆள் அனுப்பினான். 
      அப்பொழுது எலிசாவின் வேலைக்காரன் விடியற்காலமே எழுந்து புறப்பட்டுப் போகையில் இராணுவமும், குதிரைகளும், இரதங்களும் பட்டணத்தை சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு எலிசாவை நோக்கி ஐயோ! என் ஆண்டவனே என்ன செய்வோம் என்றான். 
     அப்பொழுது எலிசா அவனைப் பார்த்து பயப்படாதே! அவர்களோடு இருப்பவர்களை பார்க்கிலும் நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றார். ஆனால், அவனது வேலைக்காரனோ அதை உணர்ந்துக் கொள்ளவில்லை. அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி, கர்த்தாவே! இவன் பார்க்கும்படி, இவன் கண்களைத் திறந்தருளும் என்றார். உடனே, அவனது கண்கள் திறக்கப்பட்டது. 
      கண்கள் திறக்கப்பட்டது என்ற காரியமானது புற உறுப்புகளான கண்கள் அல்ல. அவை அகமான ஆவிக்குரிய கண்களாம்.
     அன்பானவர்களே! எலிசாவின் ஜெபமானது, ஆவிக்குரிய ஜெபமாக இருந்தது. ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும் வரை உண்மை எது? பொய்மை எது? நல்லது எது? தீயது எது? கர்த்தருடையவர்கள் யார்? பிசாசையுடையவர்கள் யார்? என்பது எவருக்கும் தெரியாது. 

        எலிசாவின் வேலைக்காரன் கர்த்தரின் வல்லமையை அறியும்படியும், கர்த்தர் எலிசாவோடு கூட இருக்கிறார் என்பதையும் உணரும்படியாக இவ்வாறு எலிசாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு வேலைக்காரனின் ஆவிக்குரிய கண்களை திறந்தருளினார்.
இவ்வாறு எலிசாவின் ஜெபமானது வேலைக்காரன் கர்த்தரையும் அவரது வல்லமையையும் அறிந்து கொள்ள செய்தது. தன்னைப் போன்று அவனும் ஆவிக்குரிய கண்களால் பார்க்க வேண்டும் என்ற வாஞ்சை எலிசாவிடம் காணப்பட்டது.

கற்றுக் கொள்ளும் பாடம்:
     ஆவிக்குரிய கண்களைத் திறக்க எலிசாவின் விண்ணப்பம்,
1. அன்பு(ஜெபம்) மற்றும்
2. ஆசையின் (ஆவிக்குரிய கண்கள் திறக்க)
பயனாக கர்த்தருக்குள் திறக்கப்பட்டது.

இவ்வாறாக தேவன், எலிசாவின் விண்ணப்பத்தை கேட்டு அவனது வேலைக்காரனின் கண்களை திறந்தருளினார். எலிசாவைப் போல நாமும் பிறரின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படுவதற்காக ஆண்டவரின் சமூகத்தில் மன்றாடுவோம்! ஆண்டவர் அவ்வாறு கண்களை திறக்கச்செய்து மகிமைப்படுவாராக! ஆமென்.

எழுதியவர்
M. ஜெய பிரகாஷ் 
Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments