தலைப்பு: சாமுவேல்: பொது மக்களுக்கான ஜெபம்
வேத பகுதி: 1 சாமுவேல் 7, 12
வேதாகம நபர் குறிப்பு:
தகப்பன் : எல்க்கனா
தாய்: அன்னாள்
பொறுப்பு: தீர்க்கதரிசி
விளக்கவுரை:
இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பெலிஸ்தர் ஜனங்களுக்கும் இடையே யுத்தம் நடந்தது. அதில் பெலிஸ்தர் ஜனங்கள் அநேக முறை இஸ்ரவேல் ஜனங்களை முறிய அடித்தனர். இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் சுண்டலிகளையும் பொன்னால் செய்த சுண்டெலிகளையும் பொன்னால் செய்த சுரூபங்களையும் வணங்கி வணங்கினார். அதன் பின்னர் சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி நீங்கள் யாவரும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் திரும்பினால், "அந்நிய தேவர்களையும்,அஸ்தரோத்தையும் " உங்கள் நடுவில் இருந்து விலக்கி, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார்.
ஜனங்கள் அதை கேட்டு அஸ்தரோத்தையும், பாகால்களையும் அவர்களை விட்டு விலக்கி விட்டு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள். பின்னும் ஜனங்கள் சாமுவேலை நோக்கி கர்த்தர் பெலிஸ்தரின் கைக்கு நீங்களாக்கி தப்புவிக்க கர்த்தரிடம் வேண்டி கொள்ள சொன்னார்கள். சாமுவேலும் இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் இடத்தில் உபவாசித்து ஜெபம் செய்து சர்வாங்க தகனபலிகளையும் செலுத்தினான்.
அப்பொழுது பெலிஸ்தர் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி நெருங்கி வரும் பொழுது கர்த்தர் இறங்கி, மகா பெரிய இடி முழக்கங்களையும் பெலிஸ்தர் மேல் முழங்க செய்து அவர்களை கலங்கடித்ததினால் அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக விழுந்தார்கள். தேவன் அந்த உபவாசம் ஜெபத்தை உடனே கேட்டு அவர்களுக்கு பதில் அளித்தார். இஸ்ரேல் ஜனங்கள் வெற்றி பெற்றார்கள் அந்த இடத்திற்கு எபநேசர் என்று பெயரிட்டான்.
பின்னும் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை முழு மனதாய் சேவிக்காமல் சாமுவேல் இடம் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள சொன்னார்கள். சாமுவேல் கர்த்தரிடத்தில் கேட்டு சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று ஜனங்கள் தாங்கள் செய்ததது தவறு என்று உணர்ந்து ஏற்கனவே நாங்கள் நிறைய பாவம் செய்துள்ளோம் அதில் நாங்கள் ராஜா வேண்டுமென்று கேட்டு பாவத்தையும் கூட்டிக் கொண்டோம் என்று சொல்லி அவர்கள் கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ண சொல்லி கேட்டார்கள். சாமுவேலும் நீங்கள் பயப்படாதீர்கள் நீங்கள் பின் வாங்காமல் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரையே சேவியுங்கள். விலகிப் போகாதீர்கள், என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்லி விண்ணப்பம் பண்ணினான்.
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு பிரியமானதை செய்யவில்லை ஆனாலும் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் பிரியமாய் இருந்ததால் கர்த்தர் அந்த விண்ணப்பத்தின் ஜெபத்தை கேட்டு அவர்களுக்கு உடனே பதில் அளித்தார் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்.
கற்றுக் கொள்ளும் பாடம்
ஒரு காரியத்தை பெற அல்லது செய்ய விரும்பினால் அதற்கு சாமுவேல் கையில் எடுத்தது ஜெபம் என்ற ஆயுதம்; அதிலும் குறிப்பாக உபவாச ஜெபம். அதனால் அதன் வல்லமையை உடனே கண்டும் கொண்டார். விசுவாசம் மற்றும் ஜ
ஜெபம் இக்காலத்தில் மிகவும் அவசியம். அதனால் ஆபத்து நாளில் நாம் அவரைப் பற்றிக் கொள்ளுவோம்.
எழுதியவர்
S. நிக்சன் ஐசக் ராஜா
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments