Ad Code

சிம்சோன்: ஒருவிசை ஜெபம் • Samson Prayer

தவக்கால தியானம்: 07
தலைப்பு: சிம்சோன்: ஒருவிசை ஜெபம்
வேத பகுதி: நியாயாதிபதிகள் 16:28

வேதாகம நபர் பற்றி:
சிம்சோன் ஒரு நியாயாதிபதி
தாண் கோத்திரம்
பெலிஸ்தரை வென்றவர் 

விளக்கவுரை:
நாம் நம்முடைய அனுதின ஜெபத்தில் மற்றும் ஆராதனை நேரங்களில் ஒருவிசை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. அதன் அர்த்தம் "Once" or "One more time" or "One last time" என்பதே. அதாவது "மறுபடியும்" அல்லது "மீண்டும் ஒரு முறை" அல்லது " கடைசி முறை" என்று அர்த்தம்.

இங்கு சிம்சோன் தனது கடைசி நேரத்தில் அவர் ஏறெடுக்கும் ஜெபத்தை நாம் பார்க்கிறோம். நியா 16:20 ல் அவர் தலை மயிர் சிறைக்கப்பட்டபடியால் கர்த்தர் அவரை விட்டு விலகினார். அது வரை நசரேயனாய் இருந்த அவருக்கு கர்த்தர் அவரோடு இருந்த படியால் மிகுந்த பெலன் இருந்தது.ஆனால் கர்த்தர் அவரை விட்டு விலகின பிறகு அவர் கடைசி நேரத்தில் ஒரு ஜெபம் செய்கிறார். அது தான் இந்த ஒரு விசை ஜெபம் (One last prayer).

சிம்சோன் விசுவாசத்தோடு கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறிந்த போதும் ஜெபித்தார். கர்த்தரும் அந்த ஜெபத்தை கேட்டு உடனே அவருக்கு பெலன் கொடுத்தார்.

கற்றுக்கொள்ளும் பாடம்:
நாம் எந்த சூழ்நிலையிலும் ஜெபிக்கும் போது கர்த்தர் நம் ஜெபத்தை கேட்கிற தேவனாய் இருக்கிறார். ஒரு பாவத்தின் அல்லது பிரச்னையின் கடைசி தருவாயில் இருக்கும்போது நாம் ஜெபித்தால் கூட கர்த்தர் நிச்சயம் பதில் கொடுப்பார். ஆமென்.

எழுதியவர்
T. டேனிஷ் 

Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments