அனைவரும் தங்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய தேவை அதிகம் இல்லை.
கலிலேயாவும், யூதாவும் வேறு வேறு சட்ட அதிகார எல்லையைக் (Jurisdiction) கொண்டவை.
யோசேப்பு, கலிலேயாவில் வாழ்ந்தாலும் "யூதா"-வின் சட்ட அதிகாரத்துக்கு (Jurisdiction) உட்பட்டவர்.
மரியாள் "கலிலேயா சட்ட அதிகாரத்துக்கு" (Jurisdiction) உட்பட்டவர்; ஆயினும் யோசேப்பை விவாகம் செய்ததால்,ரோம சட்டத்தின்படி அவர் தாமாகவே யூதா சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டவராகின்றார். ஆகவே அவரும் "பெத்லெகெம்" வர வேண்டியதாயிற்று.
சில பத்திரிக்கைகள் டில்லியில் வெளியாகும், தமிழிலும் வெளிவரும். தமிழில் நாட்டிலும் அலுவலம் இருக்கும்; ஆனால் அந்த பத்திரிக்கையில் "சட்டப் பிரச்சனைகள், டில்லிக்குட்பட்ட நீதிமன்றங்களிலே மட்டுமே தீர்க்கப்படும்" என்றிருக்கும்.
அது போன்ற நடைமுறை தான் யோசேப்பின் வாழ்வில் காணப்பட்டது; அது தீர்க்கதரிசனத்தின் வாயிலாக நிறைவேறினது.
0 Comments