பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
ராஜாதி, ராஜாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்,
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!
1.ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச
2.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)
0 Comments