அன்புடன் பாடுவோம்
ஈசனார்தம் நேசமாக
விந்தை கொண்டாடுவோம்
மா சந்தோசம் மா கெம்பீரம்
மாந்தர் நாமெல்லாருக்கும்
மாட்சியுறும் காட்சி காண
வாரும் பெத்லகேமுக்கு
முன்னணை மீதினில்
சின்னவோர் பாலனாய்
உன்னதனொரே குமாரன்
ஒய்யாரமாய் தோன்றினார்
ரூபமில்லாதவர்
சோபித பூரணர்
சாபம் நிறை பாவ மாம்ச
ரூபமெடுத்து வந்தனர்
தேசுறை பாலகர்
ஜெசென்னும் பேரினர்
மாசு திகில் நீக்கி நம்மை
மீட்க மனுவாயினர்
0 Comments