தலைப்பு: ஆகூர்: தேவைக்கு போதுமென்ற ஜெபம்
வேத பகுதி : நீதிமொழிகள் 30: 7- 9
வேதாகம நபர் குறிப்பு:
யகேயின் மகனான ஆகூர் வேதாகமத்தில் நீதிமொழிகள் புஸ்தகத்தில் உள்ள 30 ஆவது அதிகாரத்தை தொகுத்து எழுதியுள்ளார். ஞானிகளின் வார்த்தைகளை தொகுப்பவராக இவர் கருதப்படுகிறார்.
விளக்கவுரை:
அறிவியல் உலகத்தின் போற்றப்படதக்க யாரும் ஒப்பிட முடியாத ஓர் மேதை தான் Dr.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவருடைய கண்டுபுடிப்புகளில் இன்றும் கூட பல நபர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக செய்வது புவியிர்ப்பு விசையை கண்டுபுடித்தது தாகும். இப்படி பட்ட ஓர் மேதை தன் 10% மூளையை தான் பயன்படுத்தியுள்ளார். ஆனால் இவருடைய தோற்றத்தை பார்க்கும் போது மிகவும் எளிமையாக காட்சியளிப்பர். நம்முடைய வாழ்கையில் நாம் எவ்வளவு உயர் இடத்தில் இருந்தாலும் பிறரை மதிக்ககூடிய பண்புகள் உடையவராய் இருக்க வேண்டும்.
ஆகூரின் இரண்டு மனுக்கள்
மாயையையும் 1. பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்:
2. தரித்திரத்தையும் ஐசவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
நீதிமொழிகள் 30. 7,8 பார்க்கும் போது, நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற மாம்சீக ரீதியான வாழ்க்கையை பொறுத்துதான் நம் இறப்பிற்கு பிற்பாடு உள்ள வாழ்க்கையுள்ளது. உலகத்தின் வாழ்க்கையென்பது பொய்யும் மாயையும் நிறைந்தது. உலகத்தின் காரியத்தில் நாம் மோகம் கொண்டவர்களாக இருப்போம் என்றால் தேவனை நோக்கி பொய்வசனிப்மும் மாயையும் நிறைந்துள்ள இடமான பாதாளத்திற்கு விளக்கி, என் ஆத்துமாவை இரட்சியும் என்று வேண்டிகொள்வோம்.
நீதிமொழிகள் 30. 9 பார்க்கும் போது இரண்டு காரியங்களை எடுத்துகொள்வோம். ஒன்று செல்வதினால் நிறைந்து தேவனை துஷித்தவர்; இன்னொன்று தன்னுடைய தரித்தரத்தை போக்க தேவனுக்கு விரோதமான காரியங்களை நடப்பித்தவர். இவ்விரண்டும் ஆண்டவருடைய பரமகிருபாசனத்தில் சேரகூடதபடி இவர்களுடைய குணாதிசயங்கள் இவர்களை தடுத்துக்கொண்டு இருக்கிறது. எனவே நாம் ஐஸ்வரியவானகவேண்டும் என்றல்ல, என்னுடைய வாழ்வை நான் நடத்துவதற்கு தேவையான நன்மைகளால் என்னை நிரப்பும் என்று நாம் பிரார்திக்க வேண்டும்
கற்றுக்கொள்ளும் பாடம்:
"என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலுயா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் வாழ்கின்ற இவ்வாழ்கையை ஆண்டவருடைய நாமத்தை போற்றும் வண்ணமாக தன்னடக்கம் உள்ள வாழ்வாக வாழ்வோம்.
எழுதியவர்
வினோத் கண்ணா
Coordinated by
SMC Youth Fellowship
0 Comments