Ad Code

இயேசுவின் பார்வையில் சிறுவர்கள் • CSI St. Paul's Church Adaikalapattanam

அகிலம் படைத்த அன்பரின் நேசத்தை
ஆழமாய் உணர்ந்த சிறுவர்கள்

இறைவனின் சாயலை இவ்வுலகிற்கு 
ஈகையுள்ளத்தால் காட்டிய சிறுவர்கள்

உன்னதர் இயேசுவின் உபதேசத்தை 
ஊரெங்கும் நிலைநாட்டிய சிறுவர்கள்.

எண்ணற்ற மக்களின் பசியைப்போக்க 
தன்னிடமிருந்ததை கொடுத்த சிறுவர்கள்

ஏசு பிரானிண் சித்தம் நிறைவேற்ற 
ஐக்கியம் கொள்ள வைத்த சிறுவர்கள்.

ஒலிவமரக் கன்றுகளைப் போல 
ஓங்கி வளர்ந்த சிறுவர்கள்

சுயநலமில்லாமல் தன்னிடம் இருந்ததை பகிர்த்து கொடுத்த சிறுவர்கள்

இறைவனின் மகத்துவத்தை இப்பாரில் நிலைநாட்டிய சிறுவர்கள்

பரலோக வாழ்வை பெற்றிட
பரமன் கையில் உருவான சிறுவர்கள்

வேதத்தில் இடம் பிடித்த சிறுவர்கள் இயேசுவின் பார்வையில் அற்புதமான சிறுவர்கள்

ஆ. செர்வின்

Post a Comment

0 Comments