சிறகில் அமர்ந்து யாரை எதிர்ப்பார்க்கிறாய்?
சிறகு இல்லாமல் பறக்கத் துடிக்கும்
சிறுவர் கூட்டத்தையா?
விறகு இல்லாமல் அனல்மூட்டி எரியும்
சிறுவர் பட்டாளத்தையா?
பசுமையுள்ளம் கொண்டவர்கள் சிறுவர்கள்
பகைமை அற்றவர்கள் சிறுவர்கள் பகிர்ந்து கொடுப்பவர்கள் சிறுவர்கள்
பரமனுக்குக் கீழ்ப்படிபவர்கள் சிறுவர்கள்
பிஞ்சிக் குரலில் கீதம் பாடி
அஞ்சி நடப்பவர்கள் இயேசுவுக்கு
முழங்கால் இயேசுவுக்கு முன்பாக
முழுமனமும் இயேசுவுக்கு முன்பாக
கண்மணியைப் போல் காக்கின்றார்
வானில் வட்டமிடும் தூதர்கள்
வானவருக்கு கீழ்ப்படிந்து காக்கின்றனர் இயேசுவின் பார்வையில் சிறுவர்கள் சிறந்தவர்கள்
ஜெ. ஸ்டெபி மனுவேல்
0 Comments