ஞாயிறு : கிறிஸ்து பிறப்பு திருநாளுக்குப் பின்வரும் 4-ம் ஞாயிறு
தேதி : 18/01/2026
வண்ணம் : வெள்ளை
பழைய ஏற்பாடு : தானியேல் 1:8–21
நிருப வாக்கியம் : கொலோசேயர் 3:1–11
நற்செய்தி பகுதி : மாற்கு 5:1–21
சங்கீதம் : 1
2. திருவசனம் :
தலைப்பு: போதைப் பழக்கத்தில் இருந்து விடுதலை
திருவசனம் : தானியேல் 1:8
(திருவிவிலியம்) “அரசனுடைய உணவினாலும் அவன் குடிக்கும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தானியேல் தன் இருதயத்தில் உறுதி செய்து கொண்டான்.”
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
இந்த ஞாயிறு, கிறிஸ்து பிறப்பின் வெளிச்சம் மனித வாழ்வின் இருள்களை நீக்கும் சக்தி என்பதை நினைவூட்டுகிறது.
போதைப் பழக்கம் என்பது மனிதனை அடிமைத்தனத்துக்குள் தள்ளும் இருள். கிறிஸ்துவில் புதிய வாழ்வு (கொலோ.3) என்பது பழைய அடிமைகளிலிருந்து விடுதலை ஆகும்.
தானியேல் போல, மன உறுதியுடன் எடுத்த தீர்மானமே விடுதலையின் முதல் படி.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர் :
தானியேல் – தேவனுக்கு உண்மையாய் இருந்த தீர்க்கதரிசி
அவையோர் :
பாபிலோனில் சிறை வாழ்க்கை அனுபவித்த யூத இளைஞர்கள்
வசன பின்னணி :
அந்நிய நாட்டிலும், அரச அரண்மனையிலும்,
உணவு – மது – அதிகாரம் ஆகியவை இளைஞர்களை வழிமாறச் செய்யும் சூழலில்,
தானியேல் போதைப் பண்பாட்டை மறுத்து, தேவனைத் தேர்ந்தெடுத்தான்.
5. திருவசன விளக்கவுரை
போதை – அடிமைத்தனத்தின் ஆரம்பம்
அரசனுடைய உணவும் திராட்சரசமும் சாதாரண உணவு அல்ல
அது பண்பாட்டு அடிமைத்தனம்
இன்றைய நிலையில்:
#மது
#போதைப்பொருள்
#டிஜிட்டல் போதை
#தவறான பழக்கங்கள்
சங்கீதம் 1:1 ன்படி
“தீயோரின் ஆலோசனையில் நடவாதவன் பாக்கியவான்”.
💥 உறுதியான தீர்மானம் –விடுதலையின் திருப்புமுனை
“தன் இருதயத்தில் உறுதி செய்தான்” – (தானி 1:8)
விடுதலை வெளியிலிருந்து அல்ல,
உள்ளத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
கொலோசேயர் 3:5
“பூமிக்குரியவற்றை மரணப்படுத்துங்கள்”.
6. இறையியல் & வாழ்வியல்* :
மனிதன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவன்;
போதை அந்த சாயலை மங்கச் செய்கிறது
கிறிஸ்துவில்
“புதிய மனிதன்” ஆக நாம் ஆக வேண்டும்.(கொலோ 3:10)
போதைப்பழக்கம் ஒரு பாவம் மட்டும் அல்ல,
ஒரு காயம்
சபை = குற்றம் சாட்டும் இடம் அல்ல மாறாக
குணப்படுத்தும் சமூகமாக இருக்க வேண்டும்
#குடும்பம், சபை, ஜெபம் இவைகள் விடுதலையின் கருவிகள்.
7. அருளுரை குறிப்புகள் :
1. போதை மனிதனை அடிமையாக்கும்
2. உறுதியான தீர்மானம் மாற்றத்தின் தொடக்கம்
3. கிறிஸ்துவில் புதிய வாழ்வு சாத்தியம்
எழுதியவர்:
திரு. கோயில் பிள்ளை MA BD
இறையியல் கல்லூரி மாணவர்
நாகர்கோவில்.

0 Comments