Ad Code

திருப்பாடல் தியானம் 33 • அவர் சொல்ல ஆகும் • Psalm 33

திருப்பாடல் தியானம் 33
அவர் சொல்ல ஆகும்

சங்கீதம் 33 கடவுளை சர்வ வல்லமையுள்ள படைப்பாளராகவும் ராஜாவாகவும் கொண்டாடும் தாவீது ராஜாவின் துதிப்பாடலாகும்.

உலக சக்தியை விட கடவுளில் மகிழ்ச்சியடைய மற்றும் மனிதகுலத்தின் மீதான ஆண்டவரின் கவனமான அக்கறையில் நம்பிக்கை வைக்கவும் நம்மை அழைக்கிறது. காரணம், அவர் சொல்ல ஒரு காரியம் நடக்கும். அவர் கட்டளை இட்டால், அது மாறாது. இது ஆண்டவரது...
 
1. வல்ல வார்த்தை, 
2. சர்வ நீதி மற்றும் 
3. உறுதியான நிலைப்பாட்டை குறிக்கிறது.      
           
பேசும் கடவுளுடைய வார்த்தைகள் முற்றிலும் நேர்மையானவை மற்றும் நம்பமுடியாத அளவிற்கு சக்திவாய்ந்தவை. சர்வவல்லமையுள்ள இறைவன் எல்லா யுகங்களிலும் பூமி முழுவதையும் நீதியாக ஆள்பவர். அவர் எடுக்கும் முடிவு உறுதியானது. மாறாதது. இப்படிப்பட்ட ஆண்டவர் மீது நிலையான நம்பிக்கைக் கொள்வோம்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments