நீரே என் நம்பிக்கை
சங்கீதம் 39 தாவீது ராஜாவால் பொது வழிபாட்டை வழிநடத்த நியமிக்கப்பட்ட லேவியரில் ஒருவரான எதுத்தூனுக்கு எழுதப்பட்டது. சில மரபுகள் இது அவரது பிற்காலத்தில் நோய் அல்லது ஆழ்ந்த துயரத்தின் போது இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
இந்த சங்கீதம் அமைதியான, அடக்கப்பட்ட வேதனையிலிருந்து ஒரு உணர்ச்சிமிக்க பிரார்த்தனையாக நகர்கிறது. தாவீது அரசரின் ஒரே உண்மையான நம்பிக்கை கடவுளின் கருணையில் உள்ளது என்று இந்த சங்கீதம் வலியுணர்த்துகிறது.
இந்த சங்கீதம் கற்பிக்கும் பாடங்கள்:
1. வாழும் நாள்கள் நிலையற்றது. அதில் இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ முடியும்.
2. பாவத்தை மேற்கொள்வது மனிதனால் முடியாதது. கடவுளின் கிருபையால் மேற்கொள்ள முடியும் நம்பிக்கை வேண்டும்.
3. மனிதர்கள் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். கடவுளின் கிருபை மாறாதது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments