உள்ளான பலியிடுதல்
சங்கீதம் 50 தாவீது மற்றும் சாலொமோன் காலத்தில் வாழ்ந்த ஒரு முக்கிய பாடகர், இசைக் கலைஞர் மற்றும் தீர்க்கதரிசியாகிய ஆசாப் (Asaph) என்பவரால் எழுதப்பட்டது. சாலொமோனின் தேவாலயம் கட்டப்பட்ட அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட காலத்தில் (கி.மு. 959) இயற்றப்பட்டிருக்கலாம்.
அக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் வெறும் சடங்காகத் தேவாலய வழிபாட்டைசெய்து வந்தனர். மக்கள் பலிகளைச் செலுத்தினாலும், அவர்கள் இருதயத்தில் பாவங்களைச் செய்துகொண்டும், இறைவனின் கற்பனைகளை மீறிக்கொண்டும் வாழ்ந்தனர். அழகான தேவாலயம் மற்றும் முறையான பலிகளைச் செலுத்தினால் மட்டும் போதும், கடவுள் மகிழ்ந்துவிடுவார் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் இருந்தது. இந்த போலித்தனத்தைக் கண்டிக்கவே இச்சங்கீதம் எழுதப்பட்டது
இச்சங்கீதம் கடவுளை மெய்யான நீதிபதியாகச் சித்தரிக்கிறது. அவரை நம் உலக ரீதியான பலிகளால் ஏமாற்ற முடியாது. கடவுள் மிருக பலிகளை விட நன்றி பலி மற்றும் கீழ்ப்படிதலையே விரும்புகிறார். நாமும் அவ்விதம் உள்ளான மாற்றத்தோடு, கடவுளைத் தேடுவோம். வானத்தையும் பூமியையும் சாட்சியாக அழைத்து, தேவன் சீயோனிலிருந்து பிரகாசிக்கிறார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments