புனித திங்கள் அன்று நடந்த 3 நிகழ்வுகள்
1. அத்தி மரம் விசுவாச பயிற்சி
2. ஆலய சுத்திகரிப்பு
3. ஆலயத்தில் சுகமளித்தல்
1. அத்தி மரத்தைச் சபித்தல்
இயேசு பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்குச் செல்லும் வழியில் பசியாய் இருந்தார். அப்பொழுது வழியோரம் இருந்த ஓர் அத்தி மரத்தில் இலைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லாததைக் கண்டு, "இனி உன்னிடமிருந்து எக்காலமும் எவரும் கனி புசிக்காதிருக்கட்டும்" என்று கூறினார். இது விசுவாச பயிற்சி அளிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
2. ஆலயத்தைத் தூய்மைப்படுத்துதல்
எருசலேம் தேவாலயத்திற்குள் சென்ற இயேசு, அங்கே வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தார். "என்னுடைய இல்லம் செப வீடு எனப்படும், நீங்களோ அதைத் திருடர் குகையாக்கினீர்கள்" என்று கூறி, காசு மாற்றினவர்களின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டு ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினார்.
3. ஆலயத்தில் அற்புத குணமளித்தல்: தேவாலயத்திற்குள் வந்த குருடர்கள் மற்றும் முடவர்களை இயேசு குணப்படுத்தினார். மத்தேயு 21:14

0 Comments