Ad Code

புதுவாழ்வளிக்க அழைப்பு • A Call to Liberate

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன் வரும் 3-ம் ஞாயிறு (லெந்து 4)
தேதி: 15/03/2026
வண்ணம்: கருநீல நிறம் (violet)
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: ஏசாயா 1: 12 - 17
நிருப வாக்கியம்:
எபேசியர் 6: 5 - 9
நற்செய்தி பகுதி:
லூக்கா 15: 22-32
சங்கீதம்: 9

2. திருவசனம்
தலைப்பு: புதுவாழ்வளிக்க அழைப்பு
இருப்பிடம்: 
லூக்கா 15: 32 (a)
திருவசனம்: உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்.(பவர் திருப்புதல்)
ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்: மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்: மீண்டும் கிடைத்துள்ளான்” என்றார்".(திருவிவிலியம்)

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
A Day to be Remembered the Liberation 

4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
இந்த நூலின் ஆசிரியர் 
லூக்கா, ஒரு மருத்துவரும் ஆவார்.
அவையோர்: சீஷர்கள், பரிசேயர் & வேதபாரகர்கள்
வசன பின்னணி: 
குற்றம் செய்த ஒருவருக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுப்பதே, கிறிஸ்துவை அறிந்தோரின் உன்னத செயலாகும்.

5. திருவசன விளக்கவுரை 
லூக்கா 15:32 (a) - ல் உலக சிற்றின்பங்களுக்கும், தேவையற்ற ஆசா பாசங்களுக்கு தன்னை விற்றுப் போட்ட மகனை, கிறிஸ்து இங்கே காணமற்போன மகனாக காட்டுகிறார்.பழையப் பாவங்களை எண்ணி மீண்டும் அவர்களை ஒரு குற்றவாளியாக கருதக்கூடாது என்பது இப்பகுதியின் பிண்ணியாகும்


இரண்டு குமாரர் ஒரு மனுஷனுக்கு இருந்தார்கள்; இளையவன் தனது ஆஸ்திகளை தன் தகப்பனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் செலவழித்துப் போட்டான் (V. 13)பாவ உணர்வைப் பெற்றுத் தன்னை ஒரு குற்றவாளி என்று ஒத்துக் கொள்கிறான் (V. 17) புத்தித் தெளிந்து வேறு பாதை இல்லையெனக் கருதி, உணர்வு பெற்று தன் தகப்பனிடம் திரும்புகிறான்.

அவன் தகப்பனோ, அவனை பாவம் இளைத்தவன் என எண்ணாமல் மறுபடியும் தன் மகனாக ஏற்றுக் கொள்கிறான் (V. 20) ஏற்றுக் கொள்ள மனதில்லா மூத்தவனோ கோபம் கொண்டு வீட்டின் வெளியே நிற்கிறான்; இவனே கெட்ட குமாரன் ஆனான்.

6. இறையியல் & வாழ்வியல்
அன்பானவர்களே! மேலே நாம் பார்த்த, வாசித்த இச்சிறியப் வசன விளக்கம் மிகப் பெரிய விளக்கத்தையும், வாழ்வியலையும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. தவறை இளைத்தவர்கள் ஏதோ ஒரு முறை செய்த தவறுக்காக, அவர்களுக்கு மறு வாய்ப்பினை வழங்காதிருப்பது நல்லதல்ல. இங்கே, அந்த தகப்பன் தன் மகன் செய்த தவறை மறந்து, அவனை மறுபடியும் மகனாக ஏற்றுக் கொள்கிறான். 

கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற நாம் 
பரந்த மனதோடு எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறோமா?

பிலேமோன் நிருபத்தில் பவுல் எழுதிய வார்தைகளில், 
தவறு இளைத்த ஒநேசிமுவுக்கு மறுவாழ்வை பவுல் அப்போஸ்தலன் ஏற்படுத்திக் கொடுக்கிறார் பிலேமோனிடம். குற்றவாளி ஒநேசிமுவை, "என் மகனாகிய ஒநேசிமுவே! " என்கிறார் பவுல்
எவ்வளவு பெரிய பரந்த மனப்பான்மைப் பாருங்கள். இப்படிப் பட்ட ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

ஒவ்வொருவரையும், அவர்களது பழையப் பாவங்களைப் பாராமல் மறு வாய்ப்பளித்து கிறிஸ்துவை வெளிக் காட்டுங்கள். நாம் பாவிகளாக இருக்கும் போது, நம்மை அழைத்த கடவுளை சற்று நோக்கிப் பார்ப்போம். நம்மில் பல குற்றங்கள் இருந்தும் நமக்கு ஒவ்வொரு முறையும் மறு வாய்ப்பினையளிக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்குக் சுற்றுக் கொடுப்பது நாமும் பிறரை ஏற்றுக் கொள்ள அழைக்கப் படுகிறோம்.

மார்ட்டின் லூதர் சொன்ன ஒரு காரியம்
" கிறிஸ்து பவுலைப் போன்று கடவுளிடம் மன்றாடுகிறார்; நாம் எல்லாரும் ஒநேசிமுக்கள் ஆகையால்."

7. அருளுரை குறிப்புகள்
1. மன்னித்து புதுவாழ்வு அளிப்போம் 
2. மதிப்போடு புதுவாழ்வு அளிப்போம் 
3. மனித உறவாக (மகன்) புதுவாழ்வு அளிப்போம்

Written by,
Mr. Koilpillai.M.A.
III rd year BD Student 
Concordia Theological Seminary, Nagercoil.

Post a Comment

0 Comments