Ad Code

இறைவன் இருக்கிறாரா?

இறைவன் இருக்கிறாரா? 

அன்பில் மயங்கி நின்றேன்
ஆண்டவர் இருக்கிறார் என்றேன்
இன்பத்தில் மிதந்து போனேன்
ஈசனொருவார் உண்டு என்றேன்
உள்ளான அமைதி கண்டதில்
ஊற்றே அவர்தான் என்றேன்
ஐக்கியங்கள் கிடைத்த பொழுதில்
எல்லாம் அவரருள் உணர்ந்தேன்
ஏற்றம் அடைந்த பொழுதில்
ஒரே வழியவரே அறிந்தேன்
ஓங்கி நிலைத்த பொழுதில்
ஔரதவர் உண்டு என்றேன்

உயிரில் கலந்த எம்மிறைவா
மெய்யில் காணா விடினும்
உயிர்மெய்யில் புகழ் பாடினேன்
மெய்க்கடவுள் இருக்கிறார் என்றே.

அலைகள் வீச ஆரம்பித்தது
ஆதவன் அனலும் கூடியது
இக்கட்டில் சிக்கி நின்றேன்
ஈகைப் பெற்றாரும் நகையாட
உறவுகளும் பின் வாங்கிட
ஊழியும் வீணா பதறினேன்
ஐயம் மிகுந்த கேள்விகளால்
எனக்கு மட்டுமே இப்படியா?
ஏன் கைவிடுதல் என்றேன்
ஒலிக்கும் கேள்விகள் எழும்ப 
ஓசை எல்லாம் இரைச்சலாக
ஔலியா நானும் கதறினேன்

உயிர் கொடுத்த இயேசுவால்
மெய்ப்பிக்க முடியும் என்னில் 
உயிர்மெய் போல் வாழ்வோம் 
மெசியா இருக்கிறார் என்றே!

2026.04.26, ஞாயிறு.

Post a Comment

0 Comments