இந்த வசனத்தில் 'இருக்கிறேன்' என்பதைக் குறிக்க எபிரேய மொழியில் 'Ehyeh Asher Ehyeh' (אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆழமான பொருள் "எதிர்காலத்திலும் நான் என்னவாக இருப்பேனோ, அதுவாகவே இப்போதும் இருக்கிறேன்" என்பதாகும். (அதாவது, தேவன் காலங்களுக்கு அப்பாற்பட்டவர்; அவர் நேற்று, இன்று, என்றும் மாறாதவர்.)
கடவுள் தம்மை ஏதோ ஒரு குறிப்பிட்ட பெயருக்குள் அடக்காமல், 'இருக்கிறேன்' என்று சொன்னதன் நோக்கம், உனக்கு எது தேவையோ அதுவாக நான் இருப்பேன் என்பதே.
நீ பெலவீனமாக இருக்கும்போது, நான் உனக்கு பெலனாக இருக்கிறேன். நீ தனிமையில் வாடும்போது, நான் உனக்கு துணையாக இருக்கிறேன். நீ பாவியாகத் தவிக்கும்போது, நான் உனக்கு இரட்சகராக இருக்கிறேன். - என்றெல்லாம் பொருள்படும்.
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து இதே அதிகாரத்தோடும் கிருபையோடும், "நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்", "நானே ஜீவ அப்பம்" என்று தன்னை வெளிப்படுத்தினார். சிலுவையில் அவர் சிந்திய இரத்தம், நம்மைத் இறைவனோடு ஒப்புரவாக்கி, நித்திய வாழ்வுக்கான நிச்சயத்தைத் தந்திருக்கிறது.
கடவுள் நம்மை அழைத்தது நம் தகுதியினால் அல்ல, அவருடைய கிருபையினால். நம்மை வழிநடத்தப்போவது நமது திறமையால் அல்ல, மாறாக, அவருடைய வல்லமை. இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆளுகை செய்கிறார். அவர் நம்மை இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கச் செய்து, நமக்கான தேவ சித்தத்தை நிறைவேற்ற வல்லவர்.
இருக்கிறேன் என்று சொன்னவர் உங்களோடு...

0 Comments