Ad Code

பவுல்: இறை விருப்பத்திற்கு முதலிடம் • Lessons from Paul's Life 01

பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 01

இறை விருப்பத்திற்கு முதலிடம் – அப்போஸ்தலர் 21:14

திருத்தூதர் பவுலின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மிக முக்கியமான பாடம்: இறை விருப்பத்திற்கு நம்மையே முழுமையாகக் கையளிப்பது. அப்போஸ்தலர் 21:14-ல், பவுல் எருசலேமுக்குச் சென்றால் துன்புறுத்தப்படுவார் என்று தெரிந்தும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயன்றபோது, "ஆண்டவருடைய திருவுளம் நிறைவேறட்டும்" என்று கூறி அவர்கள் அமைதியடைந்தனர். பவுலின் இந்த மனநிலையை மையமாகக் கொண்டு கற்கும் வாழ்வியல் பாடங்கள் என்ன?

"சொந்த விருப்பத்தை விட இறை விருப்பமே மேலானது." பவுல் ஒரு மனிதராகத் தனக்கு வரவிருக்கும் ஆபத்தை உணராமல் இல்லை. இருப்பினும், தனது பாதுகாப்பு அல்லது வசதியை விட, கடவுள் தனக்கு இட்ட பணியையே பெரிதாகக் கருதினார்.
 
நாம் ஒரு முடிவெடுக்கும்போது, "இது எனக்குப் பிடித்திருக்கிறதா?" என்பதை விட, "இது இறைவனுக்குப் பிரியமானதா?" என்று கேட்கப் பழக வேண்டும்.நமது அன்றாட வாழ்வின் திட்டமிடல்களில் கடவுளுக்கு எவ்வளவு இடம் கொடுக்கிறோம்? "என் விருப்பம் அல்ல, உமது விருப்பமே நிறைவேறட்டும்" என்று சொல்லும் துணிச்சல் நமக்கு இருக்கிறதா?

"இறை விருப்பத்திற்கு முதலிடம் கொடுப்பவர், ஒருபோதும் தவறான பாதையில் செல்வதில்லை." பவுலடிகளார் காட்டிய இந்த வழியில், நமது வாழ்வின் ஒவ்வொரு முடிவையும் இறைவனிடம் ஒப்படைப்போம்.


Post a Comment

0 Comments