1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறி.உயிர். திரு. பின்வரும் 2 ம் ஞாயிறு
தேதி: 12/04/2026
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு:
நிருப வாக்கியம்:
நற்செய்தி பகுதி:
சங்கீதம்:
2. திருவசனம்
தலைப்பு: என் ஆண்டவரே, என் தேவனே
இருப்பிடம்: யோவான் 20.29
திருவசனம்:
(பவர் திருப்புதல்) அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
(திருவிவிலியம்) இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
கிறித்து உயிர்ப்பு திருநாள் தொடர் ஆசரிப்பு & தியானம்.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
இந் நிருபத்தின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பரிசுத்த யோவான்
அவையோர்:
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்
வசன பின்னணி:
யோவான் 20 ஆம் அதிகாரம் இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்த பிற்பாடு தன்னை சீஷர்களுக்கு காண்பிப்பதை விவரிக்கிறது. அந்நேரத்தில் தோமா சீஷர்களோடு இல்லாத காரணத்தினால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்து சந்தேகப்படுகிறார். மாறாக இயேசு கிறிஸ்துவினுடைய காயங்களை தொட்டுப் பார்த்த பிற்பாடு தான் அவருடைய உயிர்த்தெழுதலை நம்புவேன் என்று தோமா உறுதியாக இருக்கிறார். எனவே மீண்டும் எட்டு நாளைக்கு பிற்பாடு இயேசு கிறிஸ்து தன்னை தோமாவுக்கு வெளிப்படுத்துகிறார்.
5. திருவசன விளக்கவுரை
தோமாவுடைய அவிசுவாசத்தை நீக்கும்படியாக எட்டு நாளைக்கு பின்பு மீண்டும் இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அதன் மூலம் தோமா இயேசு கிறிஸ்துவினுடைய காயங்களை தொட்டுப் பார்த்து இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறார். இந்த விசுவாசத்தை காட்டிலும் இயேசு கிறிஸ்துவை காணாமலும் தொட்டுப் பார்க்காமலும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (happiness / blessed) இப்படிப்பட்ட விசுவாசம் தான் நிலையான விசுவாசம் என்பதை இயேசு கிறிஸ்து எடுத்துரைக்கிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களைப் போல அவருடைய உயிர்த்தெழுதலை நேரடியாக பார்ப்பதற்கோ அல்லது தோமாவை போல அவருடைய காயங்களை தொட்டு பார்ப்பதற்கோ வாய்ப்புகள் இல்லாமல் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலை அவருடைய வார்த்தைகள் மூலம் மாத்திரம் விசுவாசிக்கிறவர்கள் சீஷர்களை காட்டிலும் பாக்கியவான்கள்.
7. அருளுரை குறிப்புகள்
1. தனிப்பட்ட அனுபவம்
2. தனித்துவமான அறிக்கை
3. தனியே கற்பிக்கப்பட்ட பாடம்
எழுதியவர்
திரு. தா. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்

0 Comments