பாலியல் உணர்வுகளையும் (Urges) ஹார்மோன் மாற்றங்களையும் மனதளவில் எப்படிக் கையாளுவது?
டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும், அதனால் உண்டாகும் பாலியல் உணர்வுகளும் முற்றிலும் இயற்கையானவை. ஒரு ஆண் குழந்தை ஆணாக மாறும் இந்த வளர்ச்சிக் கட்டத்தில், உடலில் ஹார்மோன்கள் (குறிப்பாக, Testosterone) சுரப்பு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். இதை மனதளவில் ஆரோக்கியமாகக் கையாள 5 முக்கிய படிநிலைகள் இங்கே:
1. மாற்றங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல் (Acceptance)
உடலில் ஏற்படும் மாற்றங்கள் குரல் மாற்றம், முடி வளர்ச்சி மற்றும் மனதில் தோன்றும் புதிய உணர்வுகள் அனைத்தும் உங்கள் வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இது தவறானதோ அல்லது அசிங்கமானதோ அல்ல. "இது எனக்கு மட்டும் தான் நடக்கிறது" என்ற குற்ற உணர்வை விட்டுவிடுங்கள்.
2. ஆரோக்கியமான நட்பு மற்றும் உரையாடல் (Healthy Socializing)
உங்கள் உணர்வுகளைப் பற்றி நம்பிக்கைக்குரிய, உங்களை விட வயது கூடவுள்ள சரியான புரிதல் உள்ள நண்பரிடம் காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் முக்கியம். தனிமை மற்றும் போரடிக்கும் (Boredom) நேரங்களில் தான் தேவையற்ற எண்ணங்கள் அதிகம் வரும். தவறான நண்பர்கள் அல்லது இணையதளம் மூலம் அரைகுறைத் தகவல்களைப் பெறுவதை விட, அறிவியல் ரீதியான தகவல்களைத் தெரிந்துகொள்வது நல்லது. சரியான ஆவிரிக்குரிய நண்பரோடு உரையாடி மேற்கொள்வது நல்லது.
3. சுய விழிப்புணர்வு (Mindfulness)
ஒரு உணர்வு தோன்றும்போது அதற்கேற்ப உடனே செயல்படாமல், சற்று நிதானியுங்கள். "இப்போது இந்த எண்ணம் எனக்குத் தோன்றுகிறது, இது வெறும் ஹார்மோன் தூண்டுதல் தான்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் ஒரு தற்காலிகமான குழப்பமான நிலை தான். முறையான சுயக்கட்டுப்பாடும், தெளிவான புரிதலும் இருந்தால் இந்த மாற்றங்களை மிக எளிதாகக் கடந்து செல்லலாம்.
4. வாழ்வியல் முறை
உடல் வெப்பம் அதிகரிப்பது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஒரு காரணியாக அமையலாம். இறுக்கமான செயற்கை இழை (Synthetic/Polyester) ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை (Cotton) அணியுங்கள். மிகவும் இறுக்கமான உள் ஆடைகளைத் தவிர்க்கவும். காற்றோட்டமான ஆடைகள் அணிவது உடல் அசௌகரியத்தைக் குறைத்து, கவனச்சிதறலைத் தடுக்கும். தினமும் குளிப்பதும், சுத்தமான உடைகளை அணிவதும் உங்கள் மனநிலையை (Mood) புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தூக்கமின்மை உங்கள் மூளையின் சுயக்கட்டுப்பாட்டுப் பகுதியை (Prefrontal Cortex) பலவீனப்படுத்தும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
5. தூய்மையான வாழ்வு
இந்த வயதில் ஏற்படும் உடல் ரீதியான ஈர்ப்புகள் உங்களை வரையறுக்க அனுமதித்துவிடாதீர்கள். நீங்கள் இறை சாயலாகப் படைக்கப்பட்டவர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்" (சங்கீதம் 139:14). தேவையற்ற எண்ணங்கள் வரும்போது, அவற்றை எதிர்த்துப் போராட 'ஆவியின் பட்டயமாகிய' இறை வார்த்தை அவசியம். ஒவ்வொரு நாளும் காலையில், "ஆண்டவரே, இன்று என் கண்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் உமக்கு பிரியமாக இருக்க உதவி செய்யும்" என்று அர்ப்பணித்து ஜெபியுங்கள். நீங்கள் தவறி விழுந்தாலும், தேவன் உங்களை மன்னிக்கவும் மீட்கவும் வல்லவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

0 Comments