கூசா: கடவுள் பணிக்குத் தகுதியான சூழல்
1. பெயர்: கூசா • Chuza
2. அர்த்தம்:
அவர் காண்பார்
3. சிறுகுறிப்பு:
• இவர் ஏரோது அந்திப்பாவின் அரண்மனை விசாரணைக்காரராக (Steward) இருந்தவர். ஏரோதுவின் விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் உயர்மட்ட அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தலைமை நிதி அதிகாரிக்கு (Chief Financial Officer) நிகரான அதிகாரமிக்க பதவி இது.
• அரண்மனை அதிகாரியாக இருந்தபோதிலும் இவருடைய மனைவி யோவன்னா இயேசுவைப் பின்பற்றி, தங்களுக்கு உண்டான ஆஸ்திகளைக் கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய அனுமதி அளித்தவர்.
• காரியஸ்தனான கூசாவின் குடும்பம் இயேசுவுக்குச் சேவை செய்வதன் மூலம், அரண்மனைக்குள் இயேசுவின் செய்திகள் சென்றடைந்திருக்கும் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
கூசா உலகப்பிரகாரமான அதிகாரமிக்க, ஆண்டவருக்கு எதிரான ஏரோதுவின் அரண்மனையில் பணியாற்றினாலும், அவரது குடும்பம் இயேசுவின் ஊழியத்திற்குத் தாராளமாக உதவியது. காரணம் அவர் அதற்கேற்ற சூழலை குடும்பத்தில் ஏற்படுத்தி இருந்தார். ஏரோது அந்திப்பாவின் கொடூரமான அரண்மனையில் பணிபுரிந்தாலும், கூசாவின் மனைவி யோவன்னா இயேசுவைப் பின்பற்றியது மிகுந்த மனத்துணிச்சலையும், மிகப்பெரிய சவால்களையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். அந்நிகழ்வு, அவரது பாதுகாப்பிற்கும் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 8.3
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments