மன அழுத்தம் (Stress) அப்படிங்கறது இன்னைக்கு இருக்குற இளைய தலைமுறைக்கிட்ட ரொம்ப சாதாரணமா பார்க்கப்படுற ஒரு விஷயமா ஆகிடுச்சு. ஆனா இதை நெனச்சு பயப்படவே வேண்டாம், சரியான முறையில டீல் பண்ணுனா இத அழகா கையாளுடலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்க சில சிம்பிளான வழிகள் இதோ:
1. வேரைக் கண்டறியுங்கள் (காரணத்தைக் கண்டறியுங்கள்)
முதல்ல ஸ்ட்ரெஸ் எதனால வருதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
* வேலைப்பளுவா?
* ஃபியூச்சர் நினைச்ச பயமா?
* இல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்குற சிக்கலா?
பிரச்சனை என்னன்னு நமக்குத் தெளிவா தெரிஞ்சாலே, பாதி தீர்வு கிடைச்ச மாதிரிதான்!
2. "மனம் திறந்து பேசுங்கள்" (Open Up)
உங்க மனசுக்குள்ள இருக்குற கவலை, ஏமாற்றம் இல்ல சந்தோஷம்னு எதுவா இருந்தாலும் அதை மறைக்காம, உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர்கிட்ட ஷேர் பண்ணுங்க. அவங்க உங்களை ஜட்ஜ் (Judge) பண்ணாம, பொறுமையா கேக்குற நண்பரா இருக்கணும். நாம ஒரு பிரச்சனையில இருக்கும்போது நம்ம மூளை சரியா வேலை செய்யாது. நல்ல ஆலோசகரிடம் பேசும்போது, பிரச்சினையின் வேரைக் காண வழிவகுக்கும். அவங்க அந்தப் பிரச்சனையை வேற ஒரு கோணத்துல பார்த்து புதுசான ஒரு ஐடியாவைச் சொல்லுவாங்க.
3. டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox)
சோஷியல் மீடியாவுல மத்தவங்க காட்டுற அந்த 'நிறைவான' வாழ்க்கையை பார்த்துட்டு, நம்ம வாழ்க்கையை அதோட கம்பேர் பண்றது தான் பெரிய ஸ்ட்ரெஸ்ஸே. தூங்குறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியும், தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்துக்கும் மொபைல் யூஸ் பண்றதைத் தவிர்த்திடுங்க.
4. இயற்கையோடு ஒரு பயணம்
சைக்காலஜில **"Forest Bathing"** (வனக் குளியல்)னு ஒரு முறை இருக்கு. மரங்கள் இருக்குற இடத்துல கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணா பிளட் பிரஷர் குறையும், நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும்னு ரிசர்ச் சொல்லுது. அதே மாதிரி நீங்க வொர்க் அவுட் பண்ணும்போது உடம்புல 'எண்டோர்பின்' (Endorphins) அப்படிங்கற 'ஹேப்பி ஹார்மோன்' சுரக்கும். இது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிற நேச்சுரல் மெடிசின்.
5. வாழ்வியல் மாற்றங்கள்
அதிகமான காபி (Caffeine) அப்புறம் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுறதை விட்டுட்டு ஆரோக்கியமான சாப்பாட்டை எடுத்துக்கோங்க. தினமும் ஒரு 30 நிமிஷம் வாக்கிங் போறது உங்க மைண்டை செம்மையா வைக்கும். முக்கியமா, 7-8 மணிநேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் ரொம்ப அவசியம் பாஸ்!
நிறைவாக...
தினமும் ஜெபத்துல உங்க பாரங்களைச் சொல்லுங்க. வேத வசனங்களை வாசிங்க. கடவுள் நம்மை வழிநடத்துவார் அப்படிங்கற அந்த நம்பிக்கை இருந்தாலே மன அழுத்தம் தானா குறைஞ்சிடும்.

0 Comments