பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 13
பரிசுத்தமான நடக்கை – 1 தெசலோனிக்கேயர் 2:10
தெசலோனிக்கேய சபையார் மத்தியில் பவுல் ஊழியஞ்செய்த போது, அவருடைய நடத்தை எப்படி இருந்தது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். "விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், பிழையற்றவாயும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி" என்கிறார். இங்கு பரிசுத்தம் என்பது தனிப்பட்ட வாழ்விலும், நீதி என்பது பிறரோடு பழகும் சமூக வாழ்விலும், பிழையற்ற தன்மை என்பது சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் விரோதமில்லாத வாழ்வையும் குறிக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, தேவனும் சாட்சி என்று கூறுவதன் மூலம் தன் அந்தரங்க வாழ்வின் தூய்மையை அவர் உறுதிப்படுத்துகிறார்.
1. என் வாழ்க்கையைச் சாட்சியாகச் சொல்லும் போது, "தேவன் சாட்சி" என்று என்னால் துணிச்சலாகக் கூற முடியுமா?
2. என் பொது வாழ்விற்கும் அந்தரங்க வாழ்விற்கும் முரண்பாடுகள் உள்ளனவா?
3. என்னைப் பின்பற்றுபவர்கள் என்னிடம் இருந்து பரிசுத்தமான நடத்தையைக் கற்றுக் கொள்கிறார்களா?
பரிசுத்தம் என்பது ஏதோ ஒரு நாள் கடைபிடிக்கும் சடங்கு அல்ல, அது ஒவ்வொரு நாளும் நாம் நடக்கும் நடை (Walk). நம்முடைய போதனைகளை விட நம்முடைய வாழ்க்கையே உரக்கப் பேசும். பிறர் பார்க்காத இடத்திலும் தேவன் பார்க்கிறார் என்ற உணர்வோடு வாழ்வதே உண்மையான நேர்மை. நம்மைப் பின்பற்றுபவர்களுக்கு நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
Lessons from Paul's Life Journey 13
Acknowledgement
Meyego

0 Comments