எப்போதும் நன்றி கூறுதல் – பிலிப்பியர் 1:3
பவுல் சிறையில் இருந்தபோது பிலிப்பி பட்டணத்து விசுவாசிகளுக்கு இந்த நிருபத்தை எழுதினார். கஷ்டமான சூழ்நிலையிலும், தன்னை ஆதரித்த மக்களை நினைத்து அவர் வருந்தாமல், "நான் உங்களை நினைக்கும் போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்" என்கிறார். இது ஒரு முதிர்ச்சியடைந்த உள்ளத்தின் நன்றியறிதல்.
சிந்திக்க வைக்கும் கேள்விகள்:
1. ஒருவரைப் பற்றி நினைக்கும்போது முதலில் வருவது அவர்கள் செய்த குறையா அல்லது அவர்கள் மூலம் கிடைத்த நன்மையா?
2. கஷ்டமான காலங்களில் என் வாய் முறுமுறுக்கிறதா அல்லது இதுவரை பெற்ற நன்மைகளுக்காக நன்றி கூறுகிறதா?
சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்களிடம் உள்ள நன்மைகளை நினைத்துப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒருவரை நினைக்கும்போது அவர்களைப் பற்றி குறை கூறாமல், அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வது உறவுகளைப் பலப்படுத்தும். சிறைவாசம் போன்ற நெருக்கடிகளிலும் மற்றவர்களின் அன்பை நினைத்து துதிப்பது பவுலின் மன உறுதியைக் காட்டுகிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
Lessons from Paul's Life Journey
Acknowledgement
Meyego

0 Comments