Ad Code

உலக பட்டினி தினம் • World Hunger Day

ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினம் 2011 ஆம் ஆண்டு முதல் உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீண்டகால பட்டினி மற்றும் வறுமையால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவரவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.உலகில் உள்ள பசி மற்றும் வறுமை நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். 

வெறும் உணவு வழங்குவதோடு நிறுத்தாமல், மக்கள் தங்களின் பசியை தாங்களே போக்கிக் கொள்ளும் அளவிற்கான நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதை இது வலியுறுத்துகிறது.

உலகளவில் 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகாலப் பட்டினியால் வாடுகின்றனர். போர், உள்நாட்டு நெருக்கடி, பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர் மற்றும் உணவு பங்கீட்டில் உள்ள குறைபாடுகள் ஆகியவை பட்டினிக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

உலக அளவில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இதைத் தடுத்து தேவையானவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். 

நாம் உணவு சமைக்கும் போதும், உண்ணும் போது வீணாக்காமல் இருக்க வேண்டும்.

நம்மால் இயன்ற உதவியை ஆதரவற்ற நபர்களுக்கு / தொண்டு இல்லங்களுக்கு செய்ய முன்வர வேண்டும். 


Post a Comment

0 Comments