விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல் – 2 தீமோத்தேயு 4:7
பவுல் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், மரணத்தை எதிர்நோக்கி இருந்தபோது தன் ஊழியப் பாதையைத் திரும்பிப் பார்த்து, ஒரு வெற்றியாளனின் மனநிலையோடு தீமோத்தேயுவுக்கு இதை எழுதுகிறார்.
"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" என்கிறார். இங்கு விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல் என்பது, பல சோதனைகள், சிறைவாசம், துரோகங்கள் மற்றும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும், ஆரம்பத்தில் தான் கொண்டிருந்த அந்த நம்பிக்கையையும் உறுதியையும் சற்றும் தளரவிடாமல் இறுதிவரை பிடித்துக்கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
1. என் வாழ்க்கைப் பயணத்தில் போராட்டங்கள் வரும்போது நான் விசுவாசத்தைத் தளரவிடுகிறேனா அல்லது இன்னும் உறுதியாகப் பற்றிக்கொள்கிறேனா?
2. என் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை நோக்கி ஓடுகிறேனா அல்லது திசைமாறிப் போகிறேனா?
3. இன்று என் வாழ்வு முடிந்தால், பவுலைப் போல "நான் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" என்று என்னால் சொல்ல முடியுமா?
வாழ்க்கை என்பது ஒரு குறுகிய ஓட்டப்பந்தயம் அல்ல, அது ஒரு நீண்ட தூரப் பயணம் (Marathon). தொடங்குவது எளிது, ஆனால் விசுவாசத்தோடு முடிப்பதுதான் சவால். பல சூழ்நிலைகள் நம் நம்பிக்கையைத் தகர்க்க முயலும் போது, எஜமானின் முகத்தைப் பார்த்து முன்னேறுவதே விசுவாசத்தைக் காக்கும் வழி.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
Lessons from Paul's Life Journey
Acknowledgement
Meyego

0 Comments