Ad Code

கிறிஸ்தவ ஊழியங்களில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி? How to use Social Medias in Christian ministries?

கிறிஸ்தவ ஊழியங்களில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி? How to use Social Medias in Christian ministries? 

 1. ஆரம்பத்திலேயே எல்லா தளங்களிலும் கணக்குத் தொடங்குவதை விட, பழகிய சில தளங்களில் (யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மட்டும் கவனம் செலுத்துங்கள்.
2. பக்கத்தின் சுயவிவரத்தில் (Profile) சபையின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
 3. சபையாருடன் எப்போதும் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் தினசரி ஸ்டேட்டஸ்களைப் பயன்படுத்தலாம்.
 4. சபையின் சிறப்பு கூட்டங்கள் மற்றும் ஆன்லைன் ஆராதனை நேரங்களை சுவரொட்டிகளாக (Posters) வடிவமைத்துப் பகிரலாம்.
 5. ஆராதனை வீடியோக்கள் அல்லது ஒரு நிமிடக் குட்டிச் செய்திகளைப் (Reels/Shorts) பகிரலாம்.
6. எளிதாக மக்களைச் சென்றடைய புகைப்படங்கள் மற்றும் சிறிய வாசகங்களைப் பதிவிடலாம்.
7. சொல்ல வரும் செய்தி பார்ப்பவர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் புரியும் வகையில் இருக்க வேண்டும்.
 8. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது தொடர்ந்து (Consistency) பதிவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
 9. சமூக ஊடகங்களை பொழுதுபோக்கும் நோக்கில் அல்லாமல், ஜெபத்தோடு, தரமானதாகத் தயாரித்துச் செயல்படுத்த வேண்டும்.
10. பதிவுகளின் கீழ் வரும் கருத்துகளுக்கு (Comments) எப்போதும் பொறுமையுடனும், அன்பான வார்த்தைகளுடனும் பதிலளியுங்கள்.

Meyego 

Post a Comment

0 Comments