Ad Code

கிறிஸ்தவ ஊழியங்களில் சமூக ஊடகங்களில் செய்யக் கூடாதவைDon't do in Media Ministry

கிறிஸ்தவ ஊழியங்களில் சமூக ஊடகங்களில் செய்யக் கூடாதவை
Don't do in Media Ministry 

 1. ஒருவரின் தனிப்பட்ட எண்ணுக்கு அல்லது ID க்கு தினமும் வசனம் அவர்கள் விரும்பமில்லாமல் அனுப்பக் கூடாது.
 2. பதிவுகளில் தவறான இலக்கணம், எழுத்துப் பிழைகள் அல்லது தரம் குறைந்த (Blurry) படங்களைப் பயன்படுத்தக் கூடாது.
 3. வேதாகம வசனங்களை அதன் சூழலில் இருந்து பிரித்து, தவறான அர்த்தம் தரும் வகையில் சுருக்கிப் பயன்படுத்தக் கூடாது.
 4. போலிச் செய்திகள், வாட்ஸ்அப் வதந்திகள் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊழியப் பக்கங்களில் பகிரக் கூடாது.
5. லைக்ஸ் (Likes) மற்றும் ஃபாலோவர்ஸ் (Followers) எண்ணிக்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தரம் குறைந்த உள்ளடக்கங்களை (Content) பதிவிடக் கூடாது.
 7. பிறருடைய பொன்மொழிகள், கட்டுரைகள், வீடியோக்கள் அல்லது பாடல்களை அவர்களின் அனுமதியின்றி (Copyright) பயன்படுத்தக் கூடாது.
8. பதிவுகளின் கீழ் வரும் விமர்சனங்களுக்கும் தவறான கமெண்ட்களுக்கும் கோபமாகவோ, வாக்குவாதமாகவோ பதிலளிக்கக் கூடாது.
9. ஜெபமும் வேத தியானமும் இல்லாமல், வெறும் தொழில்நுட்பத் திறமையை மட்டும் நம்பி சமூக ஊடக ஊழியத்தைச் செய்யக் கூடாது.
10. சமூக ஊடகங்களுக்கு அதிக நேரம் செலவழித்துவிட்டு, சபையின் நேரடி ஆராதனை மற்றும் மேய்ப்புப் பணிகளை (Pastoral care) அலட்சியப்படுத்தக் கூடாது.

Post a Comment

0 Comments