வசனம்: "இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை;..."யோவான் 20:17
கடினம்: உயிர்த்தெழுந்த இயேசு தன்னைத் தொட வேண்டாம் என்று மகதலேனா மரியாளிடம் கூறுகிறார். ஆனால், சில நாட்களுக்குப் பின் தோமாவிடம் தன் காயங்களைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறாரே (யோவான் 20:27), ஏன் இந்த முரண்பாடு?
விளக்கம்: இங்கு "என்னைத் தொடாதே" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (Haptou), ஒரு பொருளைத் தொடுவதைக் குறிக்கவில்லை. மாறாக, "என்னை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளாதே" அல்லது "என்னைத் தடுத்து நிறுத்தாதே" (Do not cling to me) என்ற அர்த்தம் கொண்டது. இயேசு பூமியை விட்டுப் போகப்போகிறார் என்று பயந்து மரியா அவரைப் பற்றிக்கொண்டார். இயேசு அவளிடம், "நான் உடனே மறைந்துவிட மாட்டேன், பிதாவினிடத்திற்கு ஏறிப்போக இன்னும் நேரம் இருக்கிறது, எனவே பயப்படாமல் போய் சீஷர்களிடம் நான் உயிர்த்தெழுந்ததைச் சொல்" என்று அவசரப்படுத்துவதற்காக அப்படிச் கூறினார்.

0 Comments