திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு. பின்வரும் 1ஆம் ஞாயிறு
தேதி: 31/05/2026
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு:
நிருப வாக்கியம்:
நற்செய்தி பகுதி:
சங்கீதம்:
2. திருவசனம்
தலைப்பு: திரித்துவம்: தெய்வீக அன்பின் ஒன்றிப்பு
இருப்பிடம்: யோவான் 14.23
திருவசனம்:
(பவர் திருப்புதல்) இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
(திருவிவிலியம்) அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்; "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
பெந்தேகோஸ்தே ஞாயிறுக்கு பின்பு மூவொரு இறைவன் பெருவிழாவாக திரித்துவ திருநாளாக ஆசரிக்கப்படுகிறது.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: இந்நூலின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பரிசுத்த யோவான்
அவையோர்: முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்
வசன பின்னணி: இயேசு கிறிஸ்து மரணமடைவதற்கு முன்பு, ஆற்றிய கடைசி பெரிய பிரசங்கம். இது சீடர்களுக்கு மட்டும் உரைத்ததாக நம்பப்படுகிறது. இந்தப் பிரசங்கத்தில், அதிகமாக, தந்தை+ மகன் உறவு குறித்தும், தூய ஆவியார் குறித்தும் இயேசு பேசி இருக்கிறார்.
5. திருவசன விளக்கவுரை
A. யோவான் 14.23 இல் பயன்படுத்தப்பட்டுள்ள பதமான "நாங்கள்" மற்றும் "வாசம் பண்ணுவோம்" ஆகியன பன்மையில் உள்ளன. இது, தந்தை, மைந்தர் என உண்டு என்பதை சான்றுபகருகிறது.
யோவான் 14.16 இல் இயேசு தூய ஆவியானவர் குறித்து சொல்வதை பார்க்கும்போது, தந்தை, மைந்தர், தூய ஆவியார் உண்டு என்பதை நம்ப முடியும். கடவுள் உலகத்தை படைக்கும் போதும் பன்மையில் "நமது சாயல்" என்றே குறிப்பிட்டார் (ஆதி 1.27).
B. மேல் சொன்னபடி, மூவொரு கடவுள் வேறுபட்ட குணங்கள் கொண்டார்களா?
பிதா கடினமானவர் மற்றும் குமாரன் அன்பானவரா?
யோவான் 14 ஆம் அதிகாரம் மூவொரு கடவுள் ஒரே மாதிரியான குணம் உடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
யோவான் 14.23 - தந்தை அன்பாயிருப்பார்.
யோவான் 14.21 - நானும் (இயேசு) அவனில் அன்பாயிருந்து
யோவான் 14.16 - தேற்றரவாளன் (தூயாவி)
C. மூவொரு கடவுளாய் எப்படி ஒன்றாய் இருக்கிறார்கள்?
யோவான் 10.30 - நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம். திரித்துவத்தில் இது எப்படி சாத்தியமாகும். இங்கு தான் தெய்வீக அன்பின் ஒன்றிப்பு வெளிப்படுகிறது.
i) ஒரே தன்மை (Same Essence): தந்தை, மைந்தர், தூயாவி ஆகிய மூவரும் வெவ்வேறு பொருள்களால் ஆனவர்கள் அல்ல. "ஒரே சாராம்சம்" அல்லது "ஒரே தெய்வீகத் தன்மை" என்று பொருள்.
ii) ஒரே குணம் (Same Attributes): இறைவனுடைய குணாதிசயங்கள், வல்லமைகள் மற்றும் பண்புகள் ஆகிய அனைத்திலும் மூவரும் சமமானவர்கள்.
iii) ஒரே தகுதி (Same Equality): 'ஒரே தகுதி' என்று குறிப்பிட்டது சமத்துவத்தைக் (Equality) குறிக்கிறது. திரித்துவத்தில் உள்ள மூன்று நபர்களுக்குள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை.
iv) ஒரே நோக்கம் (Same Will): வெவ்வேறு எண்ணங்களையோ அல்லது முரண்பட்ட திட்டங்களையோ கொண்டிருப்பதில்லை. மனிதர்களை இரட்சிக்க வேண்டும் என்பதில் மூவருக்கும் ஒரே சித்தமே உண்டு.
v) ஒரே செயல் (Same Work): இறைவனுடைய பிரபஞ்சப் படைப்பிலும், பராமரிப்பிலும், மீட்பிலும், மூவரும் இணைந்தே செயல்படுகிறார்கள்.
vi) ஒரே பிரசன்னம் / வாசம் (Same Presence): விசுவாசிகளின் இருதயத்தில் கடவுள் வாசம் செய்யும்போது, அவர் திரித்துவமாகவே வாசம் செய்கிறார்.
vii) ஒரே நித்தியத்துவம் (Same Eternity): மூவருமே காலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்; துவக்கமும் முடிவும் இல்லாதவர்கள்.
6. இறையியல் & வாழ்வியல்
கடவுள் மனிதனுக்கு எல்லாவற்றிலும் மாதிரியானவர். இறை ஒன்றிப்பு என்பது அன்பின் ஐக்கியத்திற்கு சிறந்த முன்மாதிரி. இந்த தெய்வீக பிணைப்பு தான் திருச்சபை ஒன்றிப்புக்கு காரணமாகிறது. யோவான் 17 ஆம் அதிகாரத்தில் இதை மையமாக வைத்து தான் இயேசு ஜெபித்தார்.
7. அருளுரை குறிப்புகள்
1. ஒரே குணம் - அன்பாய் இருப்போம்
2. ஒரே பிரசன்னம் - ஒன்றாய் வாசம்பண்ணுவோம்
3. ஒரே தகுதி - கடவுளின் பிள்ளைகளாய் சமமாக வாழ்வோம்
எழுதியவர்
யே. கோல்டன் ரதிஸ் M.Sc, B.A, B.Th, B.D,
இறைப்பணி

0 Comments