குற்றாலப் பகுதியின் கிறிஸ்தவ வரலாறு, குறிப்பாக சர்ச் மிஷனரி சொசைட்டியின் (CMS) கீழ் நடைபெற்ற பிரிட்டிஷ் கால மிஷனரிப் பணிகளில் இருந்து தொடங்குகிறது.
CSI திருநெல்வேலி மறைமாவட்டத்தின் மேற்பார்வை மற்றும் தென்காசி சேகரத்தின் கீழ் இயங்கும் குற்றாலம் தூய மறுரூப ஆலய திருச்சபையானது,
1825 ஆம் ஆண்டு கனம். ரேனியஸ் ஐயா அவர்கள் குறிப்பில் இங்கு சபை உண்டாக்கப்பட்டதாக உள்ளது. இது தான் குற்றாலம் சபையின் ஆரம்பப் புள்ளியாகும்.
குற்றாலம் மாதாந்திர சபை ஆவணங்களிலும், பழைய பிரிட்டிஷ் பதிவுகளிலும் இந்த ஆலயப் பகுதி அமைந்துள்ள இடம் "ராக் ஹால்" (Rock Hall, Courtallam) என்றே அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பாறைகள் சூழ்ந்த அமைதியான இந்த நிலப்பரப்பு, ஆன்மீக தியானத்திற்கும் ஓய்விற்கும் உகந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிரிட்டிஷ் காலப்பகுதியில், பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலியின் பிற பகுதிகளில் பணிபுரிந்த சி.எம்.எஸ் (CMS) மிஷனரிகள், கடுமையான கோடைகால வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக குற்றாலப் பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு அவர்கள் தங்கியிருந்த காலத்தில், அங்கு வரும் பிற ஊழியர்களுக்காகவும், உள்ளூர் மக்களுக்காகவும் ஆராதனைகள் நடத்தத் தொடங்கினர். இதுவே, பிற்காலத்தில் ஒரு முழுமையான சபை உருவாகவும், சீசன் காலங்களில் மக்கள் திரளாகக் கூடும் ஒரு ஆன்மீக மையமாக இது மாறவும் முக்கியக் காரணமாக அமைந்தது.
இயேசு கிறிஸ்து மலையின் மேல் மறுரூபமான நிகழ்வை (Transfiguration) நினைவுகூரும் வகையில், மலை மீதுள்ள இந்த ஆலயத்திற்கு "தூய மறுரூப ஆலயம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
அப்போதைய தென்காசி சேகரத் தலைவர் Rev. J. கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன் அவர்களின், தூர தரிசனமுள்ள, சீரிய முயற்சியினால், குற்றாலத்தில் பண்டிகைக் கொண்டாடும் அனைத்து சேகரங்களும் இணைந்து, புதிய மண்டபம் மற்றும் அதன் மேலுள்ள புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. நெல்லைப் பேராயர். மகாகனம். அறிவர். J.J. கிறிஸ்துதாஸ் அவர்களால், 27.09.2015 அன்று சி.எஸ்.ஐ. தினம் அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிய கோபுரம் கட்டும்பணியும் ஆரம்பிக்கப்பட்டது.
200 ஆண்டுகள் கடந்தும், இயேசு சொன்ன மலை மீதுள்ள பட்டணமாய், தென்காசி மாவட்டம் மற்றும் பல மக்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருக்கிறது. இறைவனுக்கே மகிமை.
(இன்னும் சில வரலாற்று காரியங்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளது.)

0 Comments