Ad Code

ஆவிக்குரிய அன்பு – கலாத்தியர் 4:19 • Paul's Life

பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 20
ஆவிக்குரிய அன்பு – கலாத்தியர் 4:19

கலாத்திய சபையினர் விசுவாசத்தை விட்டு விலகிச் சென்றபோது, பவுல் அவர்களைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக ஒரு தாயின் உள்ளத்தோடு பேசுகிறார். "கிறிஸ்து உங்களுக்குள் உருவாவதற்குக் கர்ப்பவேதனைப்படுகிறேன்" என்று அவர் கூறுவது, அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் முதிர்ச்சியடைய அவர் எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் பிள்ளை உருவாவதற்குப் படும் வலியோடு தன் ஊழியத்தை ஒப்பிடுகிறார்.

சிந்திக்க வைக்கும் கேள்விகள்:
 1. என் நண்பர்கள் அல்லது உறவினர்கள் கிறிஸ்துவைப் போல மாற வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறதா?
 2. மற்றவர்களிடம் உள்ள குறைகளைக் கண்டு எரிச்சலடைகிறேனா அல்லது அவர்கள் வளர வேண்டும் என்று "கர்ப்பவேதனை"யோடு ஜெபிக்கிறேனா?

 ஒரு நபர் இரட்சிக்கப்படுவது மட்டும் போதாது; அவர் கிறிஸ்துவைப் போல சுபாவத்தில் வளரும் வரை அவருக்காகப் பாரப்பட வேண்டும். ஒரு குழந்தை வளர காலம் எடுப்பது போல, மற்றவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்போது வரும் பலவீனங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாமல், அவர்கள் கிறிஸ்துவைப்போல மாற வேண்டும் என்று விரும்புவதே உண்மையான அன்பு.
இறையாசி
உங்களோடிருப்பதாக...

Lessons from Paul's Life Journey 

Acknowledgement 
Meyego 

Post a Comment

0 Comments