இந்த கஞ்சா, வீட் (Weed) பத்திலாம் இப்பலாம் எல்லாரும் ஏதோ கூல் ட்ரெண்ட் மாதிரி பேசிக்கிறாங்க. ஆனா நிஜம் என்ன தெரியுமா? அது லைஃப்பையே காலி பண்ற ஒரு ஸ்லோ பாய்சன்.
விஷயம் ரொம்ப சிம்பிள், இத மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாரு: ஹை ஆகுறேன்னு சொல்லி மைண்ட் லோ ஆயிடும்: கஞ்சா அடிச்சா மூளை செமயா வேலை செய்யும்னு நினைச்சா அது தப்பு. இருக்குற மெமரியும் போயிடும், அப்புறம் எக்ஸாம்லயோ வேலையிலயோ சுதப்ப வேண்டியதுதான்.
ஸ்ட்ரெஸ் குறையாது, பைத்தியம் தான் பிடிக்கும்: மச்சான், செம ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு, ஒரு தம் அடிச்சா ரிலாக்ஸ் ஆயிடும்னு ஆரம்பிப்பாங்க. ஆனா கொஞ்ச நாள்ல அதுவே பெரிய டிப்ரஷனா மாறி, இல்லாத ஒன்னு இருக்குற மாதிரி பயத்தை காட்டி, கடைசில மென்டல் ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு போய் விட்ரும்
பாடி க்ளோஸ்: சிகரெட்ட விட இது ரொம்ப டேஞ்சர். லங்ஸ் காலி ஆகி, சின்ன வயசுலயே ஹார்ட் அட்டாக் வர்றதுக்கு சான்ஸ் அதிகம்.
நம்பினவங்களுக்கே துரோகம்: போதை தலைக்கேறுனா காசுக்காக வீட்ல திருட தோணும், பிரண்ட்ஸ ஏமாத்த தோணும். கடைசியில போலீஸ் கேஸ்னு ஜெயிலுக்கு தான் போகணும்.
நாம என்ன பண்ணலாம்?
கெத்தா நோ சொல்லு: பிரண்ட்ஸ் யாராவது மச்சான் இத ட்ரை பண்ணு, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா அப்படின்னு சீண்டி விட்டா, இதெல்லாம் பண்ணாதான் கெத்துனா எனக்கு அந்த கெத்தே வேண்டாம்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிட்டே இரு.
பிரச்சனைனா பேசு: ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா நல்ல பிரண்ட்ஸ் கிட்டயோ இல்ல வீட்லயோ பேசு. அதை விட்டுட்டு போதைக்குள்ள போய் ஒளிஞ்சுக்காத. ஒரு பத்து நிமிஷ ஹைக்காக மொத்த லைஃப்பயுமே ஸ்பாய்ில் பண்ணிக்காத. போதை எப்பவுமே பாதை மாற வச்சிரும்.
Say NO to Drugs!
தட்டி தூக்கு,
லைஃப்ல ஜெயிச்சு காட்டு!
Meyego
9486810915

0 Comments