1. ஞாயிறு குறிப்புகள்
தேதி:28-06-2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: சகரியா 8:18-23
நிருப வாக்கியம்:ரோமர் 10:9-17
நற்செய்தி பகுதி: யோவான் 1:39 -42
2. திருவசன
தலைப்பு: சீடத்துவம் யோவான் 1:39
பவர் திருப்புதல்:
அவர்: “வந்து பாருங்கள்” என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள்.
திருவிவிலியம்:
"அவர் அவர்களை நோக்கி: வாருங்கள், பாருங்கள் என்றார். அவர்கள் போய் அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அன்றைய நாள் அவரோடே தங்கியிருந்தார்கள்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
அப்போஸ்தலனாகிய யோவான்
அவையோர்:
யோவான் ஸ்நானகன் அவரின் சீடர்கள் மற்றும் இயேசு
5. திருவசன விளக்கவுரை
"வந்து பாருங்கள்" என்பது இயேசு கொடுக்கும் ஓர் மிகப்பெரிய அழைப்பாகும்.
V.39. முதலில் வர வேண்டும்bஅது ஆண்டவரின் உன்னத அழைப்பை உறுதிப்படுத்துகிறது. பின்னர் பார்க்கவேண்டும்
ஆண்டவரோடு நாம் கொள்ளும் உறவின் வெளிப்பாடு, ஆண்டவரை ஆழமாய் அறியவேண்டும் எனபது அவரின் நோக்கம்.
V.39b" அன்றைய நாள் அவரோடே தங்கியிருந்தார்கள்" என்ற வாக்கியம், இயேசுவோடு நெருக்கமான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், அவருடைய சமுகத்தில் தங்கி கற்றுக்கொள்ளும் சீஷர்களாக மாறினர்.
6. இறையியல் & வாழ்வியல்
இயேசு நம்மைத் தம்மோடு உறவுகொள்ள அழைக்கிறார்.
சீஷத்துவம் என்பது
கிறிஸ்துவை அறிந்து, அவரோடு தங்கியிருப்பதன் மூலம் வளர்கிறது.
நாம் இயேசுவைப் பற்றி கேட்பது மட்டுமல்ல, அவரோடு தினமும் நேரம் செலவிட வேண்டும்.
ஜெபம், வேத வாசிப்பு, ஆகியவை கிறிஸ்துவோடு தங்குவதற்கான வழிகள். இயேசுவோடு நாம் கொள்ளும் உள்ளான உறவு, நம்மை சீஷராக வாழ வழி வகுக்கிறது.
7. அருளுரை குறிப்புகள்
"வந்து பாருங்கள்"
1. அழைக்கின்ற ஆண்டவர்
2. வெளிப்படுத்துகின்ற ஆண்டவர்
3. சீஷத்துவ வாழ்க்கை
மாற்றுகின்ற ஆண்டவர்
எழுதியவர்
இம்மானுவேல்
சபை ஊழியர்

0 Comments