Ad Code

பர்திமேயு Bartimaeus Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 27
பர்திமேயு: விடாமல் கூப்பிடுவோம்

1. பெயர்: பர்திமேயு Bartimaeus 

2. அர்த்தம்: 
அரமேய மொழியில் 'பர்' என்றால் மகன் என்று அர்த்தம். 'திமேயு' என்ற கிரேக்க வார்த்தைக்கு "கனம் பொருந்தியவன்" அல்லது "மதிப்புமிக்கவன்" என்று பொருள்.

3. சிறுகுறிப்பு: 
• 'பர்திமேயு' என்ற பெயருக்கு "திமேயுவின் மகன்" என்று பொருள்.
• பர்திமேயு எரிகோ பட்டணத்து வழியருகே அமர்ந்திருந்த ஒரு பார்வையற்ற பிச்சைக்காரன்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
நசரேயனாகிய இயேசு அந்த வழியே கடந்து போகிறார் என்று கேள்விப்பட்டவுடன், அவன் தன் சூழ்நிலையைப் பாராமல், "இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று உரத்த சத்தமாய் கூப்பிடத் தொடங்கினான். சுற்றியிருந்தவர்கள் அவனை அதட்டி, அமைதியாயிருக்கும்படி சொல்லியும், அவன் சோர்ந்து போகாமல் இன்னும் அதிகமாய் கூப்பிட்டான். அவனுடைய விசுவாசத்தைக் கண்டு இயேசு அவனைக் கூப்பிட்டு, அவனுக்குப் பார்வை அளித்தார். அவன் உடனே பார்வை அடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மாற்கு 10: 46 - 52
லூக்கா 18:35-43, 
மத்தேயு 20:29-34

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments