Ad Code

சீமோன் (குஷ்டரோகி): Simon the Leper • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 28
சீமோன்: நன்றியறிதல் உள்ள வாழ்வு

1. பெயர்: சீமோன் (குஷ்டரோகி): Simon the Leper 

2. அர்த்தம்: 
சீமோன் என்ற எபிரேயப் பெயருக்கு "கேட்டல்" அல்லது "அவர் கேட்டுள்ளார்" (Hearing / He has heard) என்று பொருள்.

3. சிறுகுறிப்பு: 
• இவர் பெத்தானியா ஊரைச் சேர்ந்தவர். 
• ஒரு காலத்தில் குஷ்டரோகியாய் இருந்து, இயேசு கிறிஸ்துவினால் சுகமடைந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது (ஏனெனில் யூத வழக்கப்படி குஷ்டரோகம் உள்ளவர் ஊருக்குள் வீடு எடுத்து விருந்து நடத்த முடியாது).

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
  சமூகம் ஒதுக்கி வைத்த தன் குஷ்டரோக வியாதியை நீக்கி, தனக்கு வாழ்வளித்த இயேசுவின் சிலுவை மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, சீமோன் தன் இல்லத்தில் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் ஒரு இரவு விருந்து அளித்தார் தன் வீட்டிற்கு அழைத்து சீமோன் விருந்து உபசரித்தார். நமக்குக் கிடைத்த நன்மைகளை மறந்துவிடாமல், நம்மை மீட்டவருக்கு நம்மிடம் உள்ளவற்றைக் கொண்டு நன்றி செலுத்துவதே உண்மையான சீடத்துவம்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 26: 6-13
மாற்கு 14: 3-9

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments