சீமோன்: குறை கூறாதே
1. பெயர்: சீமோன் (பரிசேயர்): Simon the Pharissee
2. அர்த்தம்:
சீமோன் என்ற எபிரேயப் பெயருக்கு "கேட்டல்" அல்லது "அவர் கேட்டுள்ளார்" (Hearing / He has heard) என்று பொருள்.
3. சிறுகுறிப்பு:
• இவர் யூத மதச் சட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றும் பரிசேயர்.
• இவர் இயேசுவைத் தனது வீட்டில் விருந்துண்ணும்படி அழைத்தவர்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசு பரிசேயனான சீமோன் வீட்டில் இருந்தபோது, ஒரு பாவிப் பெண் அழுதுகொண்டே தன் கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவி, தலைமுடியால் துடைத்துத் தைலம் பூசினாள். இதைக் கண்டு சீமோன் மனதிற்குள் பாவி என்று குறைக்கூற, இயேசு இரு கடனாளிகளின் உவமை மூலம் "அதிகமாய் மன்னிக்கப்பட்டவரே அதிகமாய் அன்பு கூருவார்" என்று உணர்த்தினார். சீமோன் சாதாரண உபசரிப்பைக் கூடத்(பாதம் கழுவத் தண்ணீர், முத்தம், எண்ணெய்) தராதபோது, அப்பெண் தன் அன்பைக் கொட்டினாள் என்றும் சுட்டிக்காட்டினார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 26: 6-13
மாற்கு 14: 3-9
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments