திருமறையில் யார் இவர் யாரோ? - 30
மல்குஸ்: நெருக்கடிகள் தரும் புதிய பார்வை

1. பெயர்: மல்குஸ் • Malchus 

2. அர்த்தம்: 
அரசன் அல்லது ஆளுகிறவன்

3. சிறுகுறிப்பு: 
• மல்குஸ் யூதர்களின் தலைமை ஆசாரியனாகிய காய்பாவின் வேலைக்காரன்.
• கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைக் கைது செய்ய யூத அதிகாரிகள், போர்ச்சேவகர்களோடு வந்த கூட்டத்தில் இவனும் இருந்தான்.
• பேதுரு இவனுடைய வலது காதை அறுத்துப்போட, இயேசு மீண்டும் ஒட்ட வைத்தார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
மல்குஸின் காது வெட்டப்பட்டு, பின் சுகமாக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான அனுபவம், அவனுடைய சிந்தனையை முற்றிலும் மாற்றியிருக்கும். தான் கைது செய்ய வந்த நபர் சாதாரணமானவர் அல்ல என்பதை அவன் உணர்ந்திருப்பான். அப்படியே நிஜமாகவும், ஆவிக்குரிய ரீதியிலும் மல்குஸின் செவிகள் திறக்கப்பட்டன. இதற்குப் பிறகு மல்குஸ் என்ன செய்தான் என்று வேதாகம வரலாறு நமக்குத் தெளிவாகக் கூறவில்லை என்றாலும், அதன் பிறகு அவனால் "இயேசுவின் இயக்கத்தை" பழையபடி ஒரு சாதாரணக் கண்ணோட்டத்தோடு பார்த்திருக்கவே முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
யோவான் 18: 10-11 (மல்குஸின் பெயர் மற்றும் பேதுருவின் செயல் குறிப்பிடப்பட்டுள்ளது)
லூக்கா 22: 50-51 (இயேசு காதைத் தொட்டு சுகமாக்கிய அற்புதம் விவரிக்கப்பட்டுள்ளது)
மத்தேயு 26: 51-52
மாற்கு 14: 47

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.