ஏரோது அர்கெலாயு: ஆணவம் நிலைக்காது
1. பெயர்: ஏரோது அர்கெலாயு Herod Archelaus (மகா ஏரோது மகன்)
2. அர்த்தம்: மக்களை ஆள்பவன் / மக்களின் தலைவன்
3. சிறுகுறிப்பு:
• மகா ஏரோதுவுக்குப் பின் அகஸ்டஸ் சீசரால் யூதேயா, சமாரியா, இதூமியாவின் ஆட்சியாளரானார்.
• இவன் யூதேயாவை ஆள்வதை அறிந்து, தன் குடும்பத்துடன் அங்கு செல்ல யோசேப்பு பயந்தார்.
• அரியணை ஏறியதும் ஏற்பட்ட ஒரு கலவரத்தை அடக்க, எருசலேம் கோவிலில் 3,000 யூதர்களைக் கொன்றார்.
• கொடுங்கோல் ஆட்சி காரணமாக, கி.பி. 6-இல் அகஸ்டஸ் சீசரால் பதவியிழந்து பிரான்சின் வியன்னி பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார்.
4. கற்றுக்கொள்ளும் பாடம்:
ஆணவம் கொண்டவர்கள் தங்களை மிக உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்ளலாம், ஆனால் காலம் அவர்களின் வீழ்ச்சியை மிக விரைவாகக் கொண்டு வந்துவிடும்."அகந்தை அழிவுக்கு முன்னானது" என்கிறது வேதம்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 2. 22 & 23
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments