Ad Code

உலக பத்திரிகை சுதந்திர தினம் World Press Freedom Day

உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day) ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1991-ம் ஆண்டு ஆப்பிரிக்க பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்ட "விண்ட்ஹோக் பிரகடனம்" (Windhoek Declaration) அடிப்படையில் இந்த நாள் உருவானது. யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் பரிந்துரையின்படி, 1993 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UN) மே 3-ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பத்திரிக்கை சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கருத்து சுதந்திரத்தை மதிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஊடக சுதந்திரத்தின் அடிப்படை கொள்கைகளைக் கொண்டாடுதல், சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்தல், மற்றும் பணியின்போது இன்னுயிரை இழந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் இதன் முக்கிய நோக்கங்களாகும்.

Post a Comment

0 Comments