Ad Code

ஸ்காரியோத் அல்லாத யூதா Jude / ததேயு Thaddaeus / லெபேயு Lebbaeus (சீடர்) Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 18
யூதா: கேள்விகள் கேட்டு அறிவோம் 

1. பெயர்: ஸ்காரியோத் அல்லாத யூதா Jude / ததேயு Thaddaeus / லெபேயு Lebbaeus (சீடர்)
2. அர்த்தம்: 
யூதா - கர்த்தரைத் துதிப்பேன்
ததேயு - மார்பகக் குழந்தை / பாராட்டுக்குரியவன்
லெபேயு - இதயமுள்ளவன்

3. சிறுகுறிப்பு: 
• இவர் யாக்கோபின் குமாரனாகிய யூதா என்று அழைக்கப்படுகிறார்.
• இறுதி இராப்போஜனத்தின் போது, இயேசு உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தாமல் சீடர்களுக்கு மட்டும் வெளிப்படுத்துவதன் காரணம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
• இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் யூதேயா, சமாரியா, இதுமேயா மற்றும் மெசொப்பொத்தேமியா (ஈராக், சிரியா) ஆகிய பகுதிகளில் நற்செய்தி அறிவித்தார்.
• பர்த்தலமேயுவுடன் இணைந்து அர்மீனியாவிற்கு முதன்முதலில் கிறிஸ்தவத்தைக் கொண்டு சென்றதால், அந்நாட்டுத் திருச்சபையின் ஸ்தாபகராக மதிக்கப்படுகிறார்.
• கி.பி. 65-ல் லெபனான் அல்லது பாரசீகப் பகுதியில் நற்செய்தி அறிவித்தபோது, அங்கிருந்தவர்களால் கோடாரியால் வெட்டப்பட்டு அல்லது ஈட்டியால் குத்தப்பட்டு தியாக மரணமடைந்தார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஆன்மீக வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உலக வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அறியாமையில் இருப்பதை விட, சரியான நபரிடம் கேள்வி கேட்டு தெளிவு பெறுவதே புத்திசாலித்தனம். இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரில் அன்புகூருகிறவர்களுக்கே கர்த்தர் தம்மை வெளிப்படுத்துவார் என்ற இரகசியத்தை இவரது கேள்வி நமக்குக் கற்றுத்தருகிறது.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
யோவான் 14:21-24
லூக்கா 6:16

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments