Ad Code

பிலிப்பு (இயேசுவின் சீடர்) Philip • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 13
பிலிப்பு: நற்செய்தியைப் பகர ஆவல்

1. பெயர்: பிலிப்பு (இயேசுவின் சீடர்) Philip 
2. அர்த்தம்: குதிரைகளை விரும்புபவன் Lover of horses

3. சிறுகுறிப்பு: 
• 12 சீடர்களுள் ஒருவர்
• பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவர்
• இயேசு இவரை நேரடியாகக் கண்டு, "எனக்குப் பின்சென்று வா" என்று அழைத்தார்.
• தான் இயேசுவைக் கண்டடைந்தவுடன், உடனே தன் நண்பன் நத்தானியேலிடம் அறிவித்தார்.
• 5 அப்பங்கள் 2 மீன்கள் வைத்த சிறுவனை இயேசுவுக்கு சொன்னார்.
• கிரேக்க தேசத்தைச் சேர்ந்த சிலர் இயேசுவைக் காண விரும்பியபோது, அவர்கள் முதலில் பிலிப்புவிடமே வந்து உதவி கேட்டனர்.
• பல தேசங்களில் ஊழியம் செய்த இவர் கைது செய்யப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு அல்லது கல்லால் அடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக வரலாற்று மரபுகள் கூறுகின்றன.


4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பிலிப்பு தான் இயேசுவைச் சந்தித்த மாத்திரத்திலேயே, அந்த நற்செய்தியைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல் தன் நண்பனுக்கும் பகிர்ந்தார். நத்தானியேல் சந்தேகப்பட்டபோது, அவரோடு விவாதிக்காமல் "வந்து பார்" என்று அன்போடு அழைத்தார். நாமும் நற்செய்தியைப் பிறரோடு பகிர்வதிலும், நல்வழிப்படுத்துவதிலும் பிலிப்புவைப்போல ஆவலோடு செயல்பட வேண்டும்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
யோவான் 1: 43-46 (அழைப்பும், சாட்சியும்)
யோவான் 6: 5-7 (ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்)
யோவான் 12: 20-22 (கிரேக்கர்கள் இயேசுவைத் தேடி வருதல்)
யோவான் 14: 8-9 (பிதாவைக் காண்பியும் என்ற வேண்டுதல்)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments