Ad Code

கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் கவிதை • Rev. William Clark Anbin Illam History

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலம்
பாரினில் வந்தாரே வில்லியம் கிளார்க்!
தென்காசித் திருநெல்வேலிச் சீமையிலே – அன்று
தேவனின் நற்செய்தி விதைத்தப் பெருமகன்!
சமூகப் பணியினைச் சலியாது செய்தவர்,
ஈரக்கண்ணோடு அன்று வாங்கி வைத்த நிலமிது,
ஈரடி மண்ணிலும் ஈசன் அருள்சுரக்க,
இருநூறு ஆண்டுகள் காத்தது கோவிலூற்று சபை!

இருஆயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டு
ஜூன் மாதம் பதிமூன்றாம் திருநாளில்,
நல்ஆலோசனைத் திருப்பணியின் பேரன்பால்,
நல்விடியலாய் முளைத்தது இந்த இல்லம்!
ஐந்தே ஐந்து ஆண்மக்களின் வரவோடு,
அன்பின் இல்லம் தன் கதவைத் திறந்தது!
ஆதரவற்ற நெஞ்சங்களின் துயர்துடைக்க,
ஆல விருட்சமாய் அங்கே நிமிர்ந்தது!

இருஆயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில்
பெண்கள் இல்லமும் அங்கே பிறந்தது!
பதினெட்டு ஆண்கள், பதினெட்டு பெண்கள் என
முப்பத்தி ஆறு முத்துக்கள் இன்று அங்கே!
சாதி மதப் பேதங்கள் ஏதுமின்றி,
சமூகமே திரண்டுவந்து அமுது அளிக்கும்!
பிறந்தநாளும் திருமண நாளும் அங்கே – மக்கள்
பேரன்போடு கொண்டாடும் திருநாளாகும்!

உடல் காக்க மருந்தளிக்கும் மருத்துவ சிகிச்சை!
உளம் சீராக மண்ணை மிதிக்கும் தோட்ட சிகிச்சை!
மரவள்ளியும் காய்கறியும் கைகளால் பயிரிட்டு,
"நாமும் மனிதரே" என உணரும் தொழில் சிகிச்சை!
காலை மாலை என முழங்கும் ஆராதனை,
கவலைகள் போக்கிடும் ஆன்மீக சிகிச்சை!
வீதிகளில் அலைந்தாரை மீட்டெடுத்து – இங்கு
விண்ணக வாழ்வினை மண்ணில் தருபவர்!

"வாழ்வைக் காத்து, ஆன்மாவைச் செதுக்கி"
வழிகாட்டும் தீபமாய் ஒளிருது இல்லம்!
சமுதாயம் கைவிட்ட மனிதர்களின் வாழ்வில்,
சங்கீதமாய் ஒலிக்கும் வில்லியம் கிளார்க் இல்லம்!
அன்பே உருவாய், அருளின் புகலிடமாய்,
அகிலம் போற்ற என்றும் வாழ்கவே!

Post a Comment

0 Comments